கங்கனா பேட்டி
பாலிவுட் நடிகையும், பாஜக எம்.பி.யுமான கங்கனா ரனாவத் பெண்கள் பற்றி செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, பெண்களின் குணத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்தி அவர்களை நாசம் செய்வது இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். வேலைக்கு செல்லும் பெண்கள், வெற்றிகரமான பெண்கள், நடிகைகள், அரசியலில் இருக்கும் பெண்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும் என்றார்.
தமிழ் நடிகை
கங்கனா ரனாவத் மேலும் கூறியதாவது, தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று நீங்களே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அங்கு மதிப்பிற்குரிய பிரபல நடிகர், நடிகைக்கு இடையே ரிலேஷன்ஷிப் இருக்கிறது. ஆனால் கேரக்டரை வைத்து மோசமாக பேசப்படுவதும், திட்டப்படுவதும் பெண்ணை மட்டும் தான். எப்பொழுதுமே பெண்ணை தான் குறி வைக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். அவர் பெயர் சொல்லாமல் பேசியது நடிகை த்ரிஷா கிருஷ்ணனை பற்றி தான் என மக்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
த்ரிஷா ரசிகர்கள்
கங்கனா பேசியதை கேட்டவர்கள் கூறியிருப்பதாவது, சரியாக பேசியிருக்கிறீர்கள். தலைவி த்ரிஷா கிருஷ்ணன் பொறுமையாக இருந்து வரும் நிலையில் டெல்லியில் இருந்து ஆதரவு கிடைத்திருக்கிறது. அது ஏன் த்ரிஷாவை மட்டும் மட்டம் தட்டுவது, திட்டுவது, குறை சொல்வது?. சம்பந்தப்பட்ட இருவரையும் அல்லவா விளாச வேண்டும். அதை விட்டுவிட்டு ஒருவரை குறி வைப்பது தவறு என நாங்களும் தான் ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் த்ரிஷா ரசிகர்கள்.
