இந்தியா வரும் மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், அடுத்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் பங்கேற்று விளையாட உள்ளது.
இதில், ஒருநாள் தொடருக்கான மூன்று போட்டிகளும் செப்டம்பர் 27, 30, அக்டோபர் 3 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
அதே நேரத்தில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை, ஏசியன் கேம்ஸ் தொடர் நடைபெறவுள்ளதால், இத்தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட வீரர்களை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகையால், ஏசியன் கேம்ஸ் தொடரில் இடம்பெற்றுள்ள ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, அக்சர் படேல், பும்ரா, வாஷிங்டன் சுந்தர், ஹர்ஷித் ராணா ஆகியோரை, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சேர்க்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் வீரர்களுக்கு வாய்ப்பு: இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, ஐபிஎலில் அபாரமாக செயல்பட்ட சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. குறிப்பாக, க்ருணால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ராஜத் படிதர் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
குறிப்பாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய உத்தேச அணி பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
இந்திய உத்தேச அணி (மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக) – ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, யாஷஸ்வி ஜெய்ஷ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல், க்ருணால் பாண்டியா, ராஜத் படிதர், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா, பிரின்ஸ் யாதவ், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணா, மனவ் சுதார்.
இத்தொடர் முடிந்தப் பிறகு, இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். இதொடரின் முதல் போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறும். அடுத்து 9, 11, 14, 16 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏசியன் கேம்ஸ் தொடர், அக்டோபர் 3ஆம் தேதி நிறைவு பெறும் நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டி, அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், ஏசியன் கேம்ஸ் தொடரில் இடம்பெற்ற வீரர்களால், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்கேற்க முடியாத நிலைமை ஏற்படும். இதனால், 2ஆவது போட்டியில் இருந்து ரெகுலர் வீரர்கள் விளையாட வாய்ப்புள்ளது.
முதல் போட்டிக்கு மட்டும், இளம் வீரர்களை களமிறக்கலாம் அல்லது ராஜத் படிதர், புவனேஷ்வர் குமார், க்ருணால் பாண்டியா, ஷமி போன்றவர்களுக்கு முதல் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கருதப்படுகிறது. அடுத்து, இரண்டாவது போட்டி, 9ஆம் தேதிதான் நடைபெறும். முதல் போட்டிக்கும், இரண்டாவது போட்டிக்கும் மூன்று நாட்கள் இடைவேளை இருக்கிறது. இதனால், இரண்டாவது போட்டியில் இருந்து ரெகுலர் வீரர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது.
