தொகுதிக்கு 5 அமைச்சர்கள்..இடைத்தேர்தலுக்காக களமிறங்கிறங்கும் தவெகவின் முக்கிய தலைகள்: விஜய் வகுத்த அதிரடி வியூகம்? – tvks key leaders to take charge in madurantakam and dharapuram vijays plan for the by elections

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக தயாராகி வருகிறது. சட்டப்பேரவையில் தனது பலத்தை மேலும் அதிகரிக்க இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்காக மதுராந்தகம் தொகுதியில் ஆதவ் அர்ஜுனா தலைமையிலும், தாராபுரம் தொகுதியில் செங்கோட்டையன் தலைமையிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை களமிறக்கி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்த இரண்டு இடைத்தேர்தலிலும் வெற்றி பெற விஜய் தலைமையிலான தவெக வகுத்துள்ள வியூகம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் உள்ளிட்ட இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தேர்தல் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

எப்படி ஏற்பட்டது காலியிடம்?

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததாக கூறப்படுகிறது. சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவுடன் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு எதிரான அதிருப்தி காரணமாக, சுமார் 6 எம்எல்ஏக்கள் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையும் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டன.

மதுராந்தகம், தாராபுரத்தில் இடைத்தேர்தல்

இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏவாக இருந்த மரகதம் குமரவேல் ராஜினாமா செய்த மதுராந்தகம் தொகுதியிலும், சத்தியபாமா ராஜாமணி ராஜினாமா செய்ததாராபுரம்தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தவெகவுக்கு அரசியல் ரீதியாக மட்டுமின்றி, சட்டப்பேரவை கணக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

பெரும்பான்மையை பலப்படுத்தும் முயற்சி

தவெக அரசு சட்டப்பேரவையில் தற்போது கூட்டணி ஆதரவை நம்பியுள்ள நிலையில், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று தனது எண்ணிக்கையை அதிகரிக்க அக்கட்சி தீவிரமாக செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஒருபுறம், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெகவுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன. மறுபுறம், அதிமுக பொதுச்செயலாளர்எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தவெக அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது என விமர்சித்து வருகின்றனர்.

இதனால், இடைத்தேர்தல் முடிவுகள் தவெக அரசின் நிலைத்தன்மை குறித்த அரசியல் விவாதத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தாராபுரத்திற்கு செங்கோட்டையன் .. மதுராந்தகத்திற்கு ஆதவ் அர்ஜுனா ?

இதற்கிடையே, இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்ய தவெக தரப்பில் தனித்தனி தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, தாராபுரம் தொகுதிக்கான தேர்தல் பணிகளை செங்கோட்டையன் தலைமையிலும், மதுராந்தகம் தொகுதிக்கான தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜுனா தலைமையிலும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு தொகுதியிலும் தலா 5 அமைச்சர்கள் தலைமையிலான குழுக்களை களமிறக்கி தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளியேறும் முக்கிய நிர்வாகிகள்…என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், சட்டப்பேரவையில் தவெகவின் பலம் மேலும் அதிகரிக்கும். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்கும் வாய்ப்பும் அக்கட்சிக்கு கிடைக்கும். இதனால், அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ளதாக கூறப்படும் இந்த இடைத்தேர்தல் தமிழக அரசியலில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Source link