கரூர் சம்பவம்.. நாங்க பதட்டத்தில் இருக்கிறோம்.. சீமானிடம் உதவி கேட்ட நிர்மல் குமார்: சாட்டை துரைமுருகன் போட்டுடைத்த விஷயம் – ntk saattai duraimurugan said minister nirmal kumar sought assistance from seeman

மிசா குறித்து முதல்வர் ஜோசப் விஜய் சட்டமன்றத்தில் பேசியுள்ளது தான் தமிழக அரசியல் களத்தில் விவாத பொருளாக மாறியுள்ளது. அவருடைய கருத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியை சார்ந்த சாட்டை துரைமுருகன், மிசா குறித்து முதல்வர் பேசியுள்ளது சம்பந்தமாக தனது யூடியூப் பக்கத்தில் தொடர்ச்சியாக வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

சாட்டை துரைமுருகன் வீடியோ

அந்த வகையில் தற்போது சாட்டை துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோவில் அமைச்சர் நிர்மல் குமார் அவர் பகிர்ந்துள்ள ரகசியம் தற்போது தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று கொண்டிருக்கிறது. அதாவது கரூர் சம்பவம் நடந்த சமயத்தில் அவர் நாதகவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் ஆதரவினை கோரியதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் சாட்டை துரைமுருகன்.

உதவி கேட்ட நிர்மல் குமார்

இது சம்பந்தமாக அந்த வீடியோவில் அவர் பேசுகையில், கரூரில் சம்பவம் தொடர்பாக இப்போது உண்மையை சொல்றேன். அன்றைக்கு நாதகவின் முக்கிய பொறுப்பாளருக்கு, இன்றைக்கு சட்டப்பேரவையில் நின்று பேசி கொண்டிருக்க கூடிய நிர்மல் குமார் அழைத்து நாங்க எல்லாரும் பதட்டத்தில் இருக்கிறோம். இதை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. தயவுசெய்து எங்களுக்கு இதை எதிர்கொள்வதற்கு அறிக்கையை மட்டும் தயார் செய்து தாங்கள் என்று கேட்டார்.

நானே சாட்சி

நிர்மல் குமார் நீங்கள் கேட்டீங்களா, இல்லையா? பயந்துபோய் கோழைத்தனமாக இருந்தீங்க. நீங்க அறிக்கை கேட்டதற்கு நான் சாட்சி. பக்கத்தில் நானிருக்கும் போதுதான் போன் பண்ணிங்க. யாருக்கு போன் பண்ணீங்கன்னு சொல்லட்டுமா? அலைப்பேசி எண்ணை வேணும்னா எடுத்து போடட்டுமா? என கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார் சாட்டை துரைமுருகன். தொடர்ந்து பேசிய அவர், பதட்டத்தில் இருக்கிறோம். எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை.

சீமானிடம் அறிக்கை வெளியிட சொல்லுங்க

தயவுசெய்து அண்ணன் சீமானிடம் சொல்லி அறிக்கை மட்டும் வெளியிட சொல்லுங்க. அதை பண்ணலன்னா கூட பரவாயில்லை. நீங்க எப்படி அறிக்கை எழுதுவீங்களோ, அதே போன்று எழுதி கொடுங்க கேட்டீங்க. எல்லாரும் பதறி போய் கிடந்தீங்க. நாங்க அறிக்கையெல்லாம் போட முடியாது. அங்க 41 பேர் இறந்து இருக்காங்க என்று நாங்கள் மௌனமாக இருந்தோம். இதை இல்லையென்று உங்களால் மறுக்க முடியுமா? நீங்கெல்லாம் சட்டசபைல உட்கார்ந்து பேசிட்டு இருக்கீங்க என விளாசி தள்ளியுள்ளார் சாட்டை துரைமுருகன்.

எடப்பாடி பழனிசாமி சப்போர்ட்

மேலும், 41 பேர் இறந்து போது கோழைத்தனமாக பயந்து போய் கிடந்து ஒன்றிய அரசு, எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை சப்போர்ட் பண்ணி இவ்விவகாரத்தை சமாளிச்சீங்க என்றும் தெரிவித்துள்ளார். அதோடு அவர்கள் சப்போர்ட் பண்ணவில்லை என்றால் எங்க போய் இருப்பீங்க எனவும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சாட்டை துரை போட்டுடைத்துள்ள இந்த விஷயம் தற்போது இணையத்தில் பெருமளவில் வைரலாகி கவனம் பெற்று கொண்டிருக்கிறது.

தடுமாறிய அமைச்சர் நிர்மல் குமார்-சபாநாயகர் குடுத்த Reaction

கரூர் துயர சம்பவம்

இப்படி சீமானிடம் ஆதரவு கேட்டுவிட்டு தான், தேர்தலுக்கு முன்பாக அவரை விமர்சனம் செய்து பேசினீர்களா நிர்மல் குமார் என நாதகவினர் இணையத்தில் பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அதோடு இன்னும் எத்தனை ரகசியங்கள் மறைந்துள்ளதோ எனவும் கேள்விகளை அடுக்கி வருகின்றனர். இதனிடையில் நாதக சீமான் கரூர் சம்பவத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் தாமதமாக வந்ததே காரணம் என்ற நிலைப்பாட்டில் ஆரம்பம் முதல் தற்போது வரை உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link