#BREAKING: இடைத்தேர்தலில் திமுக போட்டி.! மு.க.ஸ்டாலின் அதிரடி முடிவு.!

தமிழ்நாட்டில் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழலில் தவெக, திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

இந்நிலையில் இடைத்தேர்தலுக்கான வியூகத்தை அதிமுக மற்றும் தவெக அமைத்து வரும் நிலையில் திமுக மட்டும் மௌனம் காத்து வருகிறது. இந்நிலையில் சற்று முன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு மற்றும் கனிமொழி ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இரண்டு மாவட்ட இரண்டு தொகுதிகளின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் பணி குறித்து தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் திமுக இடைத்தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நாளை அல்லது நாளை மறுதினம் வேட்புமனுத் தாக்கல் செய்யப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, கூட்டணி கட்சிகளின் விலகல் மற்றும் தவெக-வின் வெற்றியைத் தடுப்பது உள்ளிட்ட 3 முக்கிய காரணங்களைக் கருத்தில் கொண்டு திமுக இந்த முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் தொடர் தோல்விகளால் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என்ற காரணத்தை முன்னிறுத்தியும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Source link