தள்ளிப்போகும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!. அமைச்சர் அருண்ராஜ் சொன்ன அப்டேட்! | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

2024ஆம் ஆண்டு தவெக கட்சி தொடங்கிய நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான ஜோசப் விஜய் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். தனக்கு ஆதரவு தந்த பெண்கள் ,இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக பல திட்டங்களை தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார் விஜய்.

அதில் ஒன்று தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். அரசு மருத்துவ மனைகளில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டம். தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் உள்ள ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் விஜய் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

இத்திட்டத்திற்கான ஒரு கிராம் தங்க மோதிரம் தயாரித்து வழங்கும் ரூ.755 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரபல நகைக்கடை நிறுவனங்கள் இடையில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குறிப்பாக மோதிரம் செய்வதற்கான கூலி மற்றும் இதர கட்டணங்களை வெறும் 1 பைசாவாக நிர்ணயித்து இந்நிறுவனம் குறைந்த விலைப்புள்ளியை அளித்து

ஆனால் தற்போது, இந்த திட்டம் தள்ளிப்போவதை அமைச்சர் அருண்ராஜ் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் விஜய் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளதால் திட்டம் தள்ளிப்போவது உண்மை. உசிலம்பட்டியில் இத்திட்டத்தை அவர் தொடங்கி வைக்கப்படுகிறதா என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

Source link