Mars Transit September 2026,கடக ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: செப்டம்பர் 24 முதல் 4 ராசிகளின் வாழ்க்கையில் லாபமும், செயலில் முன்னேற்றமும் சேரும் – mars transit in cancer: 4 zodiac signs that may see gains and progress from 24 september

செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். நவம்பர் 12ம் தேதி வரை இங்கு சஞ்சாரம் செய்ய உள்ள நிலையில், செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 17 வரை சனி பகவானின் நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சஞ்சரிப்பார். இந்த காலத்தில் செவ்வாய் மற்றும் சனியின் அருள் காரணமாக சில ராசிகளுக்கு அதிக அளவில் நன்மைகள் கிடைக்க உள்ளது.

பூச நட்சத்திரத்தில் செவ்வாய் தரக்கூடிய பலன்கள்:
நவகிரகங்களின் தளபதி என அழைக்கப்படக்கூடிய செவ்வாய் பகவான் கடக ராசியில் செப்டம்பர் 18ம் தேதி நுழைகிறார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 24ல் கடகத்தில் உள்ள சனி பகவான் ஆட்சி செய்யக்கூடிய பூசம் நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்தக் காலத்தில் சில ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும். குறிப்பாக அவர்களுடைய பொறுமையும், சிந்திக்க கூடிய திறன், முடிவு எடுக்கும் திறன் உள்ளிட்டவை மேம்படும்.அக்டோபர் 17 வரை எந்தெந்த ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகள் குறையும், சாதகமான பலன்கள் பெறுவார்கள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷ ராசி

மேஷ ராசி சேர்ந்தவர்களுக்கு செவ்வாய் பகவானின் இந்த பெயர்ச்சி மற்றும் தாக்கமானது பலவிதத்தில் நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும். உங்களுடைய நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் சரியான நேரத்தில் முடிக்க முடியும். சொத்து தொடர்பான நல்ல விஷயங்கள் நடக்கும். புதிதாக வீடு, மனை வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு நல்ல சூழல் உருவாகும்.

குடும்பத்தில், காதல் தொடர்பான விஷயங்களில் அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய தொழிலில் முன்னேற்றம், வலுவான நிலையை காண்பீர்கள். நிதிநிலை முன்னேற்றமும், லாபம் அதிகரிக்க கூடிய இருக்கும்.உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவீர்கள். மன கவலைகள் தீரும்.

சிம்ம ராசி

சிம்ம ராசி அன்பர்களுக்கு புதிய வாய்ப்புகள் பெறுவீர்கள். செவ்வாயின் தாக்கம் உங்களுடைய வேலை தொடர்பாக முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற செலவு அவர்களை தவிர்த்து, உங்கள் முயற்சிகளை அதிகரித்தால் நன்மைகள் உண்டாகும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள்.உங்களுடைய செயல்பாடுகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.உங்களுடைய உத்தியோகத்தில் புதிய பொறுப்புக்கள் பெறுவீர்கள். மேலும் சிக்கனமான வேலையை முடிப்பதில் திறமையை நிரூபிப்பீர்கள்.

கன்னி ராசி

கன்னி ராசி அன்பர்களுக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கும். நீங்கள் செய்யக்கூடிய வியாபாரம் அல்லது வேலையில் புதிய பொறுப்புகள் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கக்கூடிய காலம் என்பதால் உங்களுடைய முயற்சிகளை அதிகரித்தால், பல்வேறு பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். உங்கள் தொழிலில் முன்னேற்றத்தை காண்பீர்கள். உத்யோகம் தொடர்பாக நல்ல மாற்றங்கள் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் துணையின் ஆதரவும் கிடைக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசி அன்பர்களுக்கு உங்களுடைய நிதிநிலை வலுவடையக்கூடியதாக இருக்கும். மேலும் குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். சில முக்கிய பணிகளை முடிப்பதில் அவர்களுடைய ஆதரவு கிடைக்கும். வியாபாரம் தொடர்பாக லாபம் அதிகரிக்கும். வேலை தொடர்பான பிரச்சினை தீரும்.

​கடின உழைப்பு மற்றும் ஆற்றல் பெருகும். வாழ்க்கை துணை மற்றும் சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு பணிகளையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். வேலை சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.
பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை அல்லது துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. மேலும் விரிவான தகவலுக்கு, சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரை அணுகவும்.

Source link