சூர்யா, அஜித், விக்ரம், கமலை விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்டா: ஆர்த்தி ரவி

ரவி தம் வீடியோ: கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படும் வீடியோ ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் உடையது தான். இருவரும் ஒரே தம்மை மாற்றி மாற்றி புகைக்கும் வீடியோ தான் அது. ரவி மோகன் சாதாரண சிகரெட் பிடிக்கவில்லை. அவருடைய முகத்தையும், கெனிஷாவின் முகத்தை பாருங்கள். அவர்கள் புகைப்பது என்னவென்று நன்றாக புரியும் என சினிமா ரசிகர்கள் தெரிவித்து அந்த வீடியோவை ஷேர் செய்கிறார்கள்.

ரவிக்கும், கெனிஷாவுக்கும் ஸ்மோக் செய்வது பிடித்திருக்கிறது. அது அவர்களின் இஷ்டம் என ஒரு சிலர் ஆதரவு தெரிவித்தாலும் பலரும் அவர்களை விமர்சிக்கிறார்கள். ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. விவாகரத்து வரை சென்றபோதிலும் ரவியின் பெயரை தன் பெயருக்கு பின்னால் இருந்து நீக்குவதாக இல்லை ஆர்த்தி.

செம நடிப்பு: இந்நிலையில் ஆர்த்தியின் இன்ஸ்டா ஸ்டோரி மறைமுகமாக அல்ல நேரடியாகவே ரவி மோகனை பற்றி தான் என சினிமா ரசிகர்கள் பேசுகிறார்கள். அந்த ஸ்டோரியில் கூறப்பட்டிருப்பதாவது, சூர்யா, அஜித், விக்ரம், கமல் இவங்க எல்லாரையும் விட என் லைஃப்ல வந்த ஒருத்தன் நடிச்சானே நடிப்பு. ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்டா என்று உள்ளது.

ரவி மோகனுக்கு தான் ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என்கிறார் ஆர்த்தி என பேசப்படுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் இருக்கும் காமாக்யா தேவி கோவிலுக்கு சென்று வந்திருக்கிறார் ஆர்த்தி. அந்த கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்ட அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது என்கிறார்.

ஆர்த்தி கோவில் விசிட்: கோவில் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு ஆர்த்தி கூறியிருப்பதாவது,காமாக்யா அனுபவத்தை என்னால் முழுவதுமாக விவரிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாக நான் சுமந்து வந்த பாரத்துடன் அங்கு சென்று எனக்கு மிகவும் தேவைப்படும் ஸ்ட்ரென்த்துடன் திரும்பி வந்திருக்கிறேன். அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என நீங்கள் ஆண்டுக் கணக்கில் திட்டமிடலாம். ஆனால் அங்கு சென்ற பிறகே எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. காமாக்யா தேவி அழைக்காமல் யாரும் அங்கு செல்ல முடியாது.

எனக்கு தேவியின் அருள் தேவைப்பட்ட நேரத்தில் அவர் என்னை அழைத்ததாகவே உணர்கிறேன் என்றார். ஆர்த்தியின் போஸ்ட்டை பார்த்தவர்களோ, நீங்கள் சொல்வது உண்மையே. தேவியின் அழைப்பு இல்லாமல் யாரும் அந்த கோவிலுக்கு செல்லவே முடியாது. நாங்களும் பிளான் போடுகிறோம். ஆனால் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
கெனிஷா ஸ்டோரி, இசை: இதற்கிடையேதனக்கு மதிப்பு கொடுக்காத யாரும் நல்லா வாழ்ந்தது கிடையாது என கெனிஷா பிரான்சிஸ் இன்ஸ்டாவில் ஒரு ஸ்டோரியை தட்டிவிட்டிருக்கிறார். தற்போது அவர் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார். அதற்கு காரணம் ரவி மோகன் இயக்கி வரும் An Ordinary Man படம். யோகி பாபு நடித்து வரும் அந்த படம் மூலம் தான் இசையமைப்பாளராகியிருப்பதால் தான் கெனிஷாவுக்கு அவ்வளவு சந்தோஷம்.

சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்

ரவி படத்திற்கு இசையமைப்பதாக இல்லை ஆனால் ஸ்க்ரிப்ட்டை பார்த்து அசந்து போய் ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார் கெனிஷா. தான் இயக்குநராகியிருக்கும் படத்தை தயாரிக்கவும் செய்து கொண்டிருக்கிறார் ரவி மோகன். அதனால் இயக்குநர், தயாரிப்பாளர் என்கிற முறையில் தன் படத்தில் யார், யார் வேலை செய்ய வேண்டும் என்பது அவரின் விருப்பம் ஆகும்.

Source link