இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கி (Canara Bank), தனது வாடிக்கையாளர்களுக்கான சேமிப்புக் கணக்கு (Savings Account) வட்டி விகிதங்களை மாற்றி அமைத்துள்ளது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத் தகவல்படி, இந்த மாற்றியமைக்கப்பட்ட புதிய சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள் 2026 செப்.5 முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி உள்நாட்டு, என்.ஆர்.இ (NRE) மற்றும் என்.ஆர்.ஓ சேமிப்புக் கணக்குகளுக்கான வருடாந்திர வட்டி விகிதம் 2.50% முதல் தொடங்கி, கணக்கில் உள்ள இருப்புத் தொகைக்கு ஏற்ப அதிகபட்சமாக 4% வரை வழங்கப்படும்.
புதிய சேமிப்புக் கணக்கு தொடங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியமாகும். எஸ்பிஐ, பிஎன்பி, பாங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பிற பொதுத்துறை வங்கிகளுடன் கனரா வங்கியின் வட்டி விகிதங்கள் இங்கே ஒப்பிடப்பட்டுள்ளன.
கனரா வங்கி சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள்:
ரூ. 50 லட்சத்திற்கு உட்பட்ட மற்றும் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 100 கோடி வரையிலான இருப்புத் தொகைக்கு 2.50% வட்டித் தொகையே தொடர்ந்து நீடிக்கிறது.
ரூ. 50 லட்சத்திற்கு கீழ்: 2.50%
ரூ. 50 லட்சம் முதல் ரூ. 5 கோடிக்கு கீழ்: 2.50%
ரூ. 5 கோடி முதல் ரூ. 10 கோடிக்கு கீழ்: 2.50%
ரூ. 10 கோடி முதல் ரூ. 100 கோடிக்கு கீழ்: 2.50%
ரூ. 100 கோடி முதல் ரூ. 200 கோடிக்கு கீழ்: 2.65%
ரூ. 200 கோடி முதல் ரூ. 300 கோடிக்கு கீழ்: 2.65%
ரூ. 300 கோடி முதல் ரூ. 500 கோடிக்கு கீழ்: 3.10%
ரூ. 500 கோடி முதல் ரூ. 1000 கோடிக்கு கீழ்: 3.40%
ரூ. 1000 கோடி முதல் ரூ. 2000 கோடிக்கு கீழ்: 3.55%
ரூ. 2000 கோடி மற்றும் அதற்கு மேல்: 4.00%
பிற பொதுத்துறை வங்கிகளின் சேமிப்புக் கணக்கு வட்டி விகிதங்கள்:
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI): 2025 ஜூன் 15 முதல் நடைமுறையில் உள்ளபடி, அனைத்து சேமிப்புக் கணக்கு இருப்புத் தொகைகளுக்கும் எஸ்பிஐ 2.50% வட்டி வழங்குகிறது.
பாங்க் ஆஃப் பரோடா (BoB): 2025 ஆகஸ்ட் 22 முதல் அமலில் உள்ளபடி, ரூ. 1 லட்சம் முதல் ரூ. 50 கோடி வரையிலான இருப்புக்கு 2.50% மற்றும் ரூ. 50 கோடி முதல் ரூ. 500 கோடிக்கு 2.75% வட்டி வழங்கப்படுகிறது. ரூ. 500 கோடி முதல் ரூ. 1,000 கோடிக்கு 3.50%, ரூ. 1,000 கோடி முதல் ரூ. 2,000 கோடிக்கு 4.50% மற்றும் ரூ. 2,000 கோடிக்கு மேல் 4.75% வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பாங்க் ஆஃப் இந்தியா (BOI): 2026 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளபடி, ரூ. 50 கோடி வரை 2.5%, ரூ. 50 கோடி முதல் ரூ. 250 கோடி வரை 2.6%, ரூ. 250 கோடி முதல் ரூ. 500 கோடி வரை 2.75%, ரூ. 500 கோடி முதல் ரூ. 1000 கோடி வரை 3%, ரூ. 1000 கோடி முதல் ரூ. 1500 கோடி வரை 3.15%, ரூ. 1500 கோடி முதல் ரூ. 2000 கோடி வரை 3.3%, ரூ. 2000 கோடி முதல் ரூ. 2500 கோடி வரை 4.75%, ரூ. 2500 கோடி முதல் ரூ. 3000 கோடி வரை 5.7% மற்றும் ரூ. 3000 கோடிக்கு மேல் 6.25% வட்டி வழங்கப்படுகிறது.
பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா (BoM): 2025 செப்டம்பர் 1 முதல் ரூ. 1 கோடி வரை 2.50%, ரூ. 1 கோடி முதல் ரூ. 100 கோடி வரை 2.60% மற்றும் ரூ. 100 கோடிக்கு மேல் 2.75% வட்டி வழங்கப்படுகிறது.
இந்தியன் வங்கி (Indian Bank): 2026 ஜூலை 4 முதல் அமலில் உள்ளபடி, ரூ. 10 லட்சம் வரை 2.50%, ரூ. 10 லட்சம் முதல் ரூ. 200 கோடி வரை 2.60%, ரூ. 200 கோடி முதல் ரூ. 750 கோடி வரை 2.65% மற்றும் ரூ. 750 கோடிக்கு மேல் 2.80% வட்டி வழங்கப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB): 2025 அக்டோபர் 1 முதல் ரூ. 100 கோடி வரை 2.50%, ரூ. 100 கோடி முதல் ரூ. 500 கோடி வரை 2.70%, ரூ. 500 கோடி முதல் ரூ. 1,000 கோடி வரை 3.60%, ரூ. 1,000 கோடி முதல் ரூ. 2,000 கோடி வரை 3.75% மற்றும் ரூ. 2,000 கோடிக்கு மேல் 4.25% வட்டி வழங்கப்படுகிறது.
யுகோ வங்கி (UCO Bank): 2025 ஜூன் 23 முதல் நடைமுறையில் உள்ளபடி, ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட இருப்புக்கு 2.50% வட்டி வழங்கப்படுகிறது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா (UBI): 2026 ஆகஸ்ட் 10 முதல் அமலில் உள்ளபடி, ரூ. 50 லட்சம் வரை 2.5%, ரூ. 50 லட்சம் முதல் ரூ. 50 கோடி வரை 2.55%, ரூ. 50 கோடி முதல் ரூ. 100 கோடி வரை 2.6%, ரூ. 100 கோடி முதல் ரூ. 500 கோடி வரை 2.75%, ரூ. 500 கோடி முதல் ரூ. 1000 கோடி வரை 3%, ரூ. 1000 கோடி முதல் ரூ. 1500 கோடி வரை 3.15%, ரூ. 1500 கோடி முதல் ரூ. 2000 கோடி வரை 3.65%, ரூ. 2000 கோடி முதல் ரூ. 3000 கோடி வரை 5.6% மற்றும் ரூ. 3000 கோடிக்கு மேல் 6.25% வட்டி அளிக்கப்படுகிறது.
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு
இலவச வரம்பைத் தாண்டிய பணப்பரிவர்த்தனை கட்டணம் உயர்வு: அனுமதிக்கப்பட்ட இலவசப் பரிவர்த்தனை வரம்பைத் தாண்டி பணம் எடுக்கும் கனரா வங்கி வாடிக்கையாளர்கள், இனி ஒவ்வொரு பணப் பரிவர்த்தனைக்கும் ரூ. 23 மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணமாகச் செலுத்த வேண்டும். முன்னதாக இது ரூ. 20 பிளஸ் ஜிஎஸ்டியாக இருந்தது.
இலவச வரம்புகள்: மெட்ரோ நகரங்களில் ஒரு மாதத்திற்கு 3 இலவசப் பரிவர்த்தனைகளும், மெட்ரோ அல்லாத பிற பகுதிகளில் 5 இலவசப் பரிவர்த்தனைகளும் அனுமதிக்கப்படுகின்றன. இலவச வரம்பைத் தாண்டிய நிதி சாரா பரிவர்த்தனைகளுக்கு (Non-financial transactions) ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 5 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாகத் தொடர்ந்து நீடிக்கும்.
சொந்த வங்கி ஏடிஎம் வரம்பு: கனரா வங்கி ஏடிஎம் மற்றும் கேஷ் ரீசைக்கிளர்களில் மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 5 முறையும், மூத்த குடிமக்களுக்கு 8 முறையும் இலவசப் பரிவர்த்தனைகள் அனுமதிக்கப்படுகின்றன.
தோல்வியடைந்த பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: 2026 செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளபடி, வங்கி இருப்பு போதாமை போன்றவற்றால் ஏடிஎம்-களில் தோல்வியடையும் பரிவர்த்தனைகளுக்கான சேவை கட்டணத்தை ரூ. 17 பிளஸ் ஜிஎஸ்டியில் இருந்து ரூ. 23 பிளஸ் ஜிஎஸ்டியாக கனரா வங்கி உயர்த்தியுள்ளது.
