முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து மாணவர்களுடன் அமைச்சர் சம்பத் குமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் வாலிபால் விளையாடினர்.
அம்மாடியோ! பிரதமருக்கு ரூ.27 கோடி சம்பளமா? அமைச்சர்களின் சம்பளமும் டாப்புல இருக்கு; எந்த நாட்டுல தெரியுமா?
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள எஸ்.என்.எஸ் தனியார் கல்லூரியில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று அமைச்சர் சம்பத்குமார் கலந்து கொண்டு போட்டியை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சம்பத்குமார், விளையாட்டு வீரர்களை பார்க்கும் போது ஒரு புதிய நம்பிக்கை எழுகிறது என்றும் உங்களது பெற்றோர்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றும் கூறினார். தொடர்ந்து, மாணவர்களை உலக அரங்கிற்கு எடுத்து செல்ல வேண்டுமென முதல்வர் செயல்படுகிறார் என்றும் கல்வியில் நாம் நன்கு திகழ்ந்து வருகிறோம், அது நம் கல்விக்கு கிடைத்த வெற்றி, ஆனால் விளையாட்டு துறையில் பதக்கங்கள் வெல்வதில் எங்கு இருக்கிறோம் என தேட வேண்டி உள்ளது என்று கூறினார்.
விளையாட்டு துறையில் வீரர்களால் உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பதற்காக பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாது என்றும் திறமைகள் அனைவரிடமும் உள்ளது அதனை நாம் வெளி கொணர வேண்டும் வலிகளை தாங்கும் மன உறுதி வேண்டும் என்றார். அனைத்து மாவட்டங்களிலும் ஒலிம்பிக்கான களங்களை உருவாக்கி பயிற்சி அளிக்க போகிறார்கள் என்றார்.
54 விளையாட்டு போட்டிகள் இங்கு துவங்கிறது என்றும் கோவையில் 1,41,000 பேர் பதிவு செய்துள்ளது நம் முதல்வரின் வெற்றி என கூறலாம் என்றார். எஸ்.என்.எஸ் கல்லூரிக்கும் தமிழக வெற்றி கழகத்திற்கும் நெருக்கம் உள்ளது. நம்முடைய பூத் கமிட்டி இங்கு தான் நடந்தது. பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகளுக்கு இடம் தர மாட்டேன் என கூறினார்கள், ஆனால் இங்கு அனுமதி கொடுத்தார்கள் அப்போது நம் தலைவர் இங்கு இரண்டு தினங்கள் இருந்து பூத் கமிட்டியில் கலந்து கொண்டார் என்றார்.
மாவட்ட ஆட்சியரை நீங்கள் கலெக்டராக பார்த்துள்ளீர்கள், அவர் ஒரு விளையாட்டு வீரர் அவரும் விளையாட நம் மாவட்டம் இந்த முறை முதல் இடத்தில் வரவேண்டும் என்றார். மேலும் கோவை மாவட்ட விளையாட்டு துறை அலுவலர்கள் பங்களிப்பு மிக முக்கியமானது அவர்களுக்கு நன்றி, விளையாட்டு ஆசிரியர்கள் அர்பணிப்பு உங்களை மேம்படுத்தும் என்ற அவர் தவறான விஷயங்கள் தான் பார்க்க அட்ராக்சனாக இருக்கும் ஆனால் அந்த எண்ணம் இருப்பவர்கள் வெளியே விளையாட்டு துறைக்கு வர மாட்டார்கள் என்றார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர் பவன் குமார் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு தாமும் இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்பதாக குறிபிட்டார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் சம்பத்குமாரும் மாவட்ட ஆட்சியரும் போட்டிகளை துவக்கி வைத்து சிறிது நேரம் வாலிபால் விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.
