அமெரிக்க நீர்மூழ்கி ட்ரோன் கைப்பற்றியது ஈரான்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நீர்மூழ்கி ட்ரோன் ஒன்றை, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கைப்பற்றி உள்ளதாக ஈரான் அறிவித்து உள்ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் நீடித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை மூடி உள்ள ஈரான், அமெரிக்கா தனது அத்துமீறல்களை நிறுத்தினால் மட்டுமே திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. ஈரானுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாடு மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கு சொந்தமான நீர்மூழ்கி கலன் ஒன்றை கைப்பற்றி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஆளில்லாமல் செல்லும் கலனில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஜலசந்தியில், அமெரிக்காவுக்கு சொந்தமான டிரோன் ஒன்றை தங்களது வான்பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி உள்ளது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் அமெரிக்க ராணுவம், தங்களது நீர் மூழ்கி ட்ரோன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக அறிவித்துள்ளது.

Source link