துலீப் டிராபி 2026 தொடரின் இறுதிப் போட்டியில் ஈஸ்ட் ஜோன், சௌத் ஜோன் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. சென்னையில் நடைபெற்று வரும் இப்போட்டியில், முதலில் களமறிங்கிய ஈஸ்ட் ஜோன் அணி, முதல் இன்னிங்ஸில் 708/10 ரன்களை குவித்து அசத்தியது. இஷான் கிஷன், 334 பந்துகளில் 30 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் உட்பட 270 ரன்களை குவித்து அசத்தினார்.
சௌத் ஜோன் இன்னிங்ஸ்: அடுத்து முதல் இன்னிங்ஸ் களமிறங்கிய சௌத் ஜோன் அணியில், தேவ்தத் படிக்கல் 62 (104), கேப்டன் திலக் வர்மா 99 (211) ஆகியோர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். இதனால், அந்த அணி, 336/10 ரன்களை மட்டும் சேர்த்து, 372 பின்தங்கியது. மேலும், பிட்சும் சுழலுக்கு சாதகமாக மாறியதால், சௌத் ஜோன் அணிக்கு பாலோ ஆன் கொடுத்தால், ஈஸ்ட் ஜோன் அணி, இன்னிங்ஸ் வெற்றியைப் பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.
ஆனால், ஈஸ்ட் ஜோன் அணி, 372 ரன்கள் முன்னிலையை பெற்று, தற்போது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. ஓபனர்கள் வைபவ் சூர்யவன்ஷி 8 (16), அபிமன்யு ஈஸ்வரன் 3 (13) ஆகியோர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. தற்போது ஷிகர் மோகன், கேப்டன் இஷான் கிஷன் இருவரும் இணைந்து, 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறார்கள். ஈஸ்ட் ஜோன் அணியும், 500+ ரன்கள் முன்னிலையை பெற்றுள்ளனர்.
டிரா ஆகவே வாய்ப்பு: சௌத் ஜோன் அணி, கடைசி நாளில் 500+ ரன்களை அடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ரன்களை அடிப்பது மிகவும் கடினம். விக்கெட்களை இழக்காமல் ஆடினால், அதிகபட்சம் போட்டியை டிரா செய்ய மட்டுமே முடியும்.
ஆனால், போட்டியை டிரா செய்தாலும், அது சௌத் ஜோன் அணிக்கு, நல்ல விஷயமாக இருக்காது.
காரணம், இந்தியாவில் நடைபெறும் முதல்தர டெஸ்ட் போட்டிகளில், நாக்அவுட் சுற்றின்போது போட்டி டிரா ஆகிவிட்டால், முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற அணியை வெற்றிபெற்ற அணியாக அறிவிப்பார்கள். இதனால்தான், ஈஸ்ட் ஜோன் அணி, வெற்றியை பெற முயற்சிக்காமல், இப்போட்டியை டிரா செய்ய முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, நாளை முழுவதும் கூட ஈஸ்ட் ஜோன் அணி, பேட்டிங் ஆடி, இப்போட்டியை டிரா செய்யவும் வாய்ப்புள்ளது.
ஸ்கோர் விபரம்: முதலில் களமிறங்கிய ஈஸ்ட் ஜோன் அணியில், அபிமன்யு ஈஸ்வரன் 72 (86), வைபவ் சூர்யவன்ஷி 44 (37), ஷிகர் மோகன் 85 (120) ஆகிய டாப் ஆர்டர் பேட்டர்கள் அபாரமாக செயல்பட்ட நிலையில், கேப்டன் இஷான் கிஷன் 270 (334), குமார் குஷக்ரா 101 (132) ஆகிய மிடில் வரிசை பேட்டர்கள் சிறப்பாக விளையாடி பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்து, ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள்.
பிறகு, அனுகுல் ராய் 45 (98), குரைஷி 40 (91) ஆகியோரும் கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்டனர். இதனார், ஈஸ்ட் ஜோன் அணி, முதல் இன்னிங்ஸில் 708/10 ரன்களை எடுத்தது.
அடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய சௌத் ஜோன் அணியில், தேவ்தத் படிக்கல் 62 (104), கேப்டன் திலக் வர்மா 99 (211), கடைசி நேரத்தில் மிலிந்த் 43 (68) ஆகியோர்தான் சிறப்பாக ஆடினார்கள். மற்றவர்கள் சொதப்பியதால், ஈஸ்ட் ஜோன் அணி 336/10 ரன்களை மட்டும் சேர்த்து, முதல் இன்னிங்ஸ் கடும் பின்னடைவை சந்தித்தது.
