தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்தில் தடபுடல் ஏற்பாடு.. தலைவர்களுக்கு பரிமாறப்பட்ட ஸ்பெஷல் விருந்து – லிஸ்ட பாருங்க – cm vijay tvk alliance leaders meeting special food menu list details

தவெக கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்குத் தயாராகும் உணவுகள் குறித்த பட்டியல் வெளியீடப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில், மாலை 4 மணிக்கு முதல்வர் விஜய் தலைமையில் இக்கூட்டம் கூடவுள்ளது.இக்கூட்டத்தில் அரசியல் களம் குறித்துப் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக,கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ பெயரைத் தேர்வு செய்வது,பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வரைவது, கூட்டணியின் நிர்வாகப் பொறுப்புகளைப் பிரித்து வழங்குவது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என்று வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்தில் பங்கேற்கும் தலைவர்கள் விவரம்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK): திருமாவளவன், வன்னி அரசு, சிந்தனைச் செல்வன், ரவிகுமார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (MDMK): வைகோ, துரை வைகோ இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML): காதர் மொய்தீன், ஷாஜஹான், சையத் பரூக் பாஷா காங்கிரஸ் (Congress): மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி, தாரகை கத்பட்தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படவுள்ள உணவுகள் குறித்த சுவாரஸ்யமான பட்டியல் வெளியாகியுள்ளது.

வழங்கப்படவுள்ள சிற்றுண்டிகள் மற்றும் பானங்கள்:

வறுத்த முந்திரி மற்றும் பாதாம் டீ மற்றும் காபி 3 வகையான புத்துணர்ச்சி பழச்சாறுகள் (Juices) வெஜ் ரோல், மைசூர் போண்டா, தயிர் வடை மற்றும் சாம்பார் வடை கர்நாடகா ஸ்பெஷல் பட்டர் தோசை, பட்டர் மசால் தோசை கர்நாடகா சாம்பார் மற்றும் 2 வகையான சட்னிகள்

Source link