அதாவது முதல்வர் விஜய், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக நிறுவன தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் கூட்டணியின் பெயர் அறிவிப்பு, எதிர்காலச் செயல்பாடுகளுக்கான பொதுக் குறைந்தபட்சத் திட்டம் வகுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
கூட்டணி ஒற்றுமையைப் பேணி, புதிய அரசியல் கூட்டமைப்பை வலுவாக்கும் நோக்கில் பனையூர் தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடதுசாரி கட்சிகள், தங்களுக்குள் தனியாக நிர்வாகக் குழுக்களைக் கூட்டி விவாதித்த பின், இந்தத் தேர்தல் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை எனப் புறக்கணிப்பு முடிவை எடுத்துள்ளன. மற்றொருபுறம் தமிழகத்தில் இரு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தக் கூட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
