புதுடில்லி: வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அ டிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 11ம் தேதி, நா டு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட, வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொதுத்துறை வங்கி அதிகாரிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
