திடீர் மூச்சுத்திணறல்; மருத்துவமனையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு!

சென்னை கொளத்தூர் தொகுதியின் தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை எதிர்த்து தவெக சார்பில் வி.எஸ்.பாபு போட்டியிட்டு சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினை அவருடைய சொந்த தொகுதியிலேயே தோற்கடித்து வெற்றி பெற்றது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அதன்படி கொளத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக வி.எஸ்.பாபு பொறுப்பு வகித்து வரும் சூழ்நிலையில், அதிகாலையில் வீட்டில் இருந்த போது அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஐ.சி.யூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வயது மூப்பு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வி.எஸ்.பாபு தொடர்ச்சியாக மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் விரைவில் அவர் வீடு திரும்புவுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link