ஒடிசாவில் மீட்கப்பட்ட 5 குட்டி ஒரங்குட்டான்கள்: வனப்பகுதிக்கு வந்த பின்னணி குறித்து தீவிர விசாரணை

எழுதியவர்: Sujit Bisoyi

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஐந்து குட்டி ஒரங்குட்டான்களை வனத்துறையினர் மீட்ட மறுநாளில், இதில் விலங்கு கடத்தல் கும்பலுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து ஒடிசா காவல்துறையின் சிறப்புப் படையும், வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டுப் பிரிவும் (WCCB) ஆய்வு செய்து வருகின்றன.

தற்போது, இந்த ஒரங்குட்டான்கள் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் உயிரியல் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 1 முதல் 1.5 அடி உயரம் கொண்ட அளவின் அடிப்படையில் குட்டிகளாகத் தோன்றும் இந்த ஒரங்குட்டான்களை மாநிலத்திலேயே வைத்துக்கொள்வதற்கு, மத்திய அரசு அதிகாரிகளிடம் மாநில அரசு அனுமதி கோரியுள்ளது.

இந்தியாவில் குட்டி ஒரங்குட்டான்களா?

செவ்வாய்க்கிழமை அதிகாலை படாபாய் என்ற கிராமத்திற்கு அருகில் உள்ள வனப்பகுதியில் இந்த ஒரங்குட்டான்கள் தென்பட்டன. காலை 6 மணிக்குள் இந்த செய்தி வேகமாகப் பரவியதை அடுத்து, ஆயிரக்கணக்கான ஆர்வமுள்ள பொதுமக்கள் திரண்டனர். தகவலறிந்து விரைந்த வனத்துறையினர் தலையிட்டு அவற்றை மீட்டனர்.

ஒரங்குட்டான்கள் மீட்கப்பட்ட இடத்தில் இருந்து, கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகளை சரிபார்ப்பதுடன், உள்ளூர்வாசிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது மூன்று பேர் கொண்ட சிறப்பு அதிரடிப்படை. போபால் மற்றும் கொல்கத்தாவில் உள்ள டபுள்யூ.சி.சி.பி பிரிவுகளைச் சேர்ந்த குழுக்களும் விரைவில் அங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா வனப்பகுதிக்கு ஒரங்குட்டான்கள் எவ்வாறு வந்தன என்றும், இந்த மர்மத்தில் கடத்தல் கோணம் உள்ளதா என்றும் நடத்தப்படும் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதாக சிறப்பு அதிரடிப் படையின் பொறுப்பு துணை ஆய்வாளர் கே.வி.சிங் தெரிவித்துள்ளார்.

Screenshot 2026-09-10 092203

5 குட்டி ஒரங்குட்டான்கள் இந்தியாவுக்குள் கடத்தப்பட்டனவா?

வனத்துறை தயாரித்துள்ள ஆவணங்களை சிறப்பு அதிரடிப்படை ஆய்வு செய்து வருவதாகக் கூறிய அவர், ஊகங்களுக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார். “இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம் என்பதால், ஊகித்து சொல்வது சரியாக இருக்காது… சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் கண்டறியப்பட்ட இதுபோன்ற வழக்குகளை ஆய்வு செய்து, அவற்றை விசாரித்த குழுக்களைத் தொடர்புகொண்டு வருகிறோம். தற்போது தரவுகளைச் சேகரித்து உள்ளூர் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்” என்று அவர் விளக்கினார். இருப்பினும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Screenshot 2026-09-10 092231

ஒடிசாவின் வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கணேஷ் ராம் சிங் குந்தியா இதுகுறித்து மேலும் தெளிவாகப் பேசினார்; இந்தியா ஒரங்குட்டான்களின் இயற்கையான வாழிடம் அல்ல என்றும், அதனால் விலங்கு கடத்தல்காரர்கள் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று மாநில அரசு சந்தேகப்படுவதாகவும் அவர் கூறினார். “அவை கடல் வழியா அல்லது சாலை வழியா கொண்டு வரப்பட்டனவா என்பதை சரிபார்த்து வருகிறோம்… ரயில் நிலையம், விமான நிலையம் மற்றும் இதர இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.”



Source link