72 வயதில் 20 வயது இளம்பெண்ணுடன் திருமணம்; ஆடம்பரம் இன்றி கரம் பிடித்த பிரபல வீரர்

மலேசிய முன்னாள் தேசிய கால்பந்து வீரர் டத்தோக் அப்தா அலிப் தனது 72 வயதில் 20 வயது இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.  இது சம்பந்தமான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.   

கடந்த ஆகஸ்ட் 27 அன்று கோலா திரெங்கானுவில் எந்தவித ஆடம்பரமும் இன்றி இந்த திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி குறித்த புகைப்படத்தை அவரது தம்பியும்,  முன்னாள் தேசிய வீரருமான டத்தோக் யூனுஸ் அலிப் ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதையடுத்து, இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.  இந்த திருமணம் குறித்த தகவலைப் பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. எனினும், திருமணம் நடைபெற்ற இடம் மற்றும் நேரம் குறித்தான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.   

பிரபல கால்பந்து வீரரான டத்தோக் அப்தா அலிப், 1970 களின் பிற்பகுதியிலும் 1980 களின் முற்பகுதியிலும், அதாவது மலேசியக் கால்பந்தின் பொற்காலத்தில் தேசிய அணியில் முக்கிய வீரராக அங்கம் வகித்தவர். மேலும், 1980 மாஸ்கோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Source link