ஆபரண தங்கம் விலை இன்று உயர்வு; சவரனுக்கு ரூ.880 அதிகரிப்பு

சென்னை: சென்னையில் இன்று(செப் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 08) ஆபரண தங்கம், கிராம் 14,270 ரூபாய்க்கும், சவரன், 1,14,160 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 255 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

நேற்றைய நிலவரம்

நேற்று (செப் 09), தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் குறைந்து, 14,145 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் சரிவடைந்து, 1,13,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.

இன்றைய நிலவரம்

இந்நிலையில் இன்று(செப் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது; வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.255, கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Source link