சர்தார் ரசிகர்கள் விமர்சனம்: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி ஒரு ஸ்பையாக நடித்த சர்தார்படம் வெற்றி பெற்றது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து இன்று ரிலீஸ் செய்திருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிப்பதற்காகவே பிறந்தது போன்று அசத்தி வரும் எஸ்.ஜே. சூர்யாவை வில்லனாக ஆக்கினார்கள்.
இந்நிலையில் படத்தை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, இரண்டு வேடங்களில் அசத்தியிருக்கிறார் கார்த்தி. முதல் பாகத்தை விட இதில் சிறப்பாக நடித்திருக்கிறார். இது பிளாக்பஸ்டர் மெட்டீரியல்.
கதை நல்லா இருக்கிறது. ஆனால் அதை திரையில் காட்டியது பெரிதாக ஈர்க்கவில்லை. வில்லன் எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரம் ஸ்டிராங்காக இல்லை. சாம் சி.எஸ். பி.ஜி.எம். கை கொடுக்கவில்லை. தேவையில்லாத பாடல்கள், காதல் டிராக் என ஒன்று இருந்தே தீர வேண்டும் என தினிக்காமல் இருந்தது ஆறுதல். படத்தில் டுவிஸ்ட் எதையும் எதிர்பார்க்கவே வேண்டாம். ஏனென்றால் டுவிஸ்ட்டே இல்லை. அது மட்டும் இல்லை லாஜிக்கும் இல்லை. படம் ஓடும் நேரத்தை குறைத்திருக்கலாம்.
சாம் சி.எஸ்.ஸுக்கு பதில் வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்திருக்கலாம். சில ஆக்ஷன் காட்சிகள் அதிரடியாக உள்ளது. நன்றாக வர வேண்டிய படம். ஆனால் ஏமாற்றம் அளிக்கும்படி ஆகிவிட்டது. படம் ஆரம்பிக்கும்போது நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல புத்துணர்ச்சி காணாமல் போய்விடுகிறது. படத்தில் நிறைய திறமைசாலிகள் இருந்தும் கூட சர்தார் 2-ஐ காப்பாற்ற முடியவில்லை. ரொம்ப சின்சியராக நடித்திருக்கிறார் கார்த்தி. அவர் நடிப்பை குறை சொல்ல முடியாது. ஆனால் அவர் மட்டும் என்ன செய்வார்? என தெரிவித்துள்ளனர்.
சர்தார் 2 எல்லாம் கண்டிப்பாக தியேட்டரில் பார்க்க வேண்டிய படம் என்று சிலரும், ஓடிடிக்கு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என சிலரும் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்கள் புகார்: இந்நிலையில் சர்தார் 2 படத்திற்கு வந்திருக்கும் நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்த இரண்டு பிரபல நடிகர்களின் ரசிகர்களோ, சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ ஃபிளாப் ஃபிளாப்னு எத்தனை வாட்டி சொன்னீங்க மித்ரன். இப்போ உங்களுக்கு என்ன நடந்திருக்கிறது பார்த்தீர்களா என்கிறார்கள்.
சர்தார் 2 சிறப்பாக இருக்கிறது. கார்த்தியின் படம் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்று காசு கொடுத்து நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்கள் என ரசிகர்கள் சிலர் புகார் தெரிவித்துள்ளனர். சர்தார் 2 படத்தில் சூர்யாவின் சீன் பட டீஸரை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டார்கள். ஜீது மாதவன் இயக்கியிருக்கும் அந்த படம் தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கிறது.
சர்தார் 2 சுவாரஸ்யம்: சர்தார் 2 படத்தை கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பி.எஸ். மித்ரன் ஆகியோர் விளம்பரம் செய்த விதம் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. மித்ரன் என் வீட்டுக்கு வந்த கண்ண கசக்கினான். என்னடானு கேட்டப்போ கல்யாணம் ஆகப் போகுதுனு சொன்னான்.சரிடா, சர்தார் பார்ட் 2 ஸ்டார்ட் பண்ணிக்கோனு சொன்னேன் என கார்த்தி தெரிவித்தது வைரலானது.
எஸ்.ஜே. சூர்யா பேசியதும் கூட வைரலானதுடன், மீம்ஸ் கிரியேட்டர்களையும் கவர்ந்தது. பேட்டிகளே இப்படி என்றால் படம் வேற லெவலில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கலவையான விமர்சனங்கள் வந்திருக்கிறது.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
சர்தார் விழாவில் சூர்யா கலந்து கொண்டு பேசினார். அவருக்கு கருப்பு, விஸ்வநாத் அன்ட் சன்ஸ் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர்கள் வந்தது போன்று கார்த்திக்கும் நடக்கும் என ரசிகர்கள் நம்பினார்கள்.
Source link
