வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரியில் அனுமதி

Summary

மார்பு சளி பாதிப்பு காரணமாக வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

மூச்சு திணறல்

சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து த.வெ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ. திடீர் மூச்சு திணறல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற அவருக்கு மார்பு சளி பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வி.எஸ்.பாபு எம்.எல்.ஏ.வை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். சளியின் காரணமாக ஏற்பட்ட மூச்சுத்திணறலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று அல்லது நாளை அவர் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link