இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள் – கனிமொழி

Summary

தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று என்று கனிமொழி கூறி உள்ளார்.

சென்னையில் திமுக எம்பி கனிமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மறுதேர்தல் நடைபெறக்கூடிய நிலையை உருவாக்கிய தவெக அரசு எப்படி நேர்மையான அரசியல் செய்ய முடியும்?

* ஏற்கனவே ஒருகட்சியின் பெயரில் நின்று வெற்றி பெற்றவர்கள் தற்போது மறுபடியும் போட்டியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

* சட்டம் ஒழுங்கு பற்றி பதில் அளிக்காத முதலமைச்சர் விஜய் பஞ்ச் டயலாக்கையும் பழைய கதைகளையும் பேசுகிறார்.

* ஏற்கனவே உள்ள சட்டசபையில் இருந்து ஆட்சியை ஒழுங்காக நடத்துவது பற்றி தவெக அரசு சிந்திக்க வேண்டும்.

* சட்டசபைக்காகவே கலைஞர் கட்டிய ஓமந்தூரார் மருத்துவமனையை மாற்று இடத்திற்கு மாற்றி அதையே பயன்படுத்தலாம்.

* நிதியில்லை நிதியில்லை என சொல்லும் தவெக அரசு மக்கள் வரிப்பணத்தை விரயம் செய்ய அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறது.

* இருக்கின்ற சட்டசபையில் அமர்ந்து முதலில் மக்கள் பணியாற்றுங்கள்.

* தற்போது நடைபெறும் இடைத்தேர்தல் என்பது தேவையில்லாத ஒன்று.

* தவெக ஆட்சியில் தினந்தோறும் சட்டம் ஒழுங்கு சீரழிவு நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link