நொய்டா விமான நிலையத்தில் முதல்முறையாக தரையிறங்கிய வெளிநாட்டு விமானங்கள்!

புதுடில்லி: நொய்டா விமான நிலையத்தில் முதல்முறையாக 3 வெளிநாட்டு விமானங்கள் பத்திரமாக தரையிறங்கின; பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

டில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13ம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது; இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின், பிரேசில், தென்னாப்பிரிக்கா, சீனா, ஈரான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

நொய்டாவில் உள்ள ஜெவார் விமான நிலையத்தில் மூன்று ரஷ்ய ராணுவ விமானங்கள் தரையிறங்கின. புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த விமான நிலையத்தில், வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கியது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்ய ராணுவப் போக்குவரத்து விமானமான ஐஎல்-76 உட்பட 3 விமானங்கள் பத்திரமாக தரையிறங்கின. ஒரு ரஷ்ய முன்களக் குழுவும், ராணுவ அதிகாரிகளும் அந்த விமானங்களில் இந்தியா வந்தடைந்தனர். ரஷ்ய அதிபர் புடின் வருகை தரும் விமானம் டில்லியில் தரையிறங்குமா அல்லது நொய்டாவில் தரையிறங்குமா என்பது குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

Source link