சென்னை: தமிழகத்தில் தவெக அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
கடந்த சட்டசபை தேர்தலில் தவெக 35% ஓட்டுக்களை பெற்று ஆட்சியையும் பிடித்தது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே 1.8 கோடி ஓட்டுக்களை தவெக பெற்று இருந்தது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரி, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு முதல்வராக பொறுப்பேற்று விஜய் ஆட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று (செப் 10) தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மாநில அரசியல் கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தையும், அக்கட்சியின் விசில் சின்னத்தையும் தேர்தல் கமிஷன் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் வரும் இடைத்தேர்தலில் போட்டியிட தவெகவுக்கு விசில் சின்னமே கிடைக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
சிறப்பு வீடியோ!
தேர்தல் கமிஷன் நற்செய்தி: தவெக தொண்டர்கள் குஷி; முக்கிய அறிவிப்பு குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
