அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திருமாவளவன், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் கடந்த ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற தவெக கலந்தாய்வு கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. ஆனாலும் ஆட்சி தொடர்வதற்கு எங்கள் ஆதரவு என்கிற கருத்தை ஏற்கனவே தெளிவுபட கூறி இருக்கிறார்கள். இப்போதும் அதே நிலைப்பாட்டில் தான் இரண்டு கட்சிகளும் உள்ளன. தேர்தல் கூட்டணி தொடர்பாக அவர்கள் எந்த நிலைப்பாட்டையும் இப்போதைக்கு எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தொகுதி உடன்பாடு வைத்து கொள்வதில் தங்களுக்கு எந்த நெருடலும் இல்லை. அது குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிப்போம் என்று இரு தரப்பிலிருந்தும் இரண்டு கட்சிகளில் தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆகவே புதிதாக உருவாகி இருக்கிற மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரு கட்சிகளின் ஆதரவு உண்டு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இது வெற்றி கூட்டணி என்று பெயரிட்டிருக்கிறோம். ஆகவே இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதில் எந்த பிரச்சனையும் இருக்க வாய்ப்பில்லை என்று நம்புகிறேன். தவெக தரப்பில் யாருக்கு போட்டியிட வாய்ப்பளிப்பது என்பது குறித்து முடிவெடுத்த முழு அதிகாரமும் தவெகவிற்கே உண்டு. அதில் நாங்கள் கருத்து சொல்வதற்கு எதுவும் இல்லை. அவர்களை ஆதரிப்பதா வெற்றி பெற வைப்பதா இல்லையா என்பதை அந்த தொகுதிகளைச் சார்ந்த மக்கள் முடிவு செய்வார்கள். அந்த கூட்டணியில் தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு அங்கமாக இருக்கிறது. ஆகவே வேட்பாளர்கள் வெற்றி பெறுவது கூட்டணிக்கான தேவை. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெக வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடும்.
மிசா காலத்து கொடுமைகளை சந்தித்த முக்கியமான தலைவர்களும் முன்னாள் முதல்வர் முதலமைச்சர் ஸ்டாலின் ஒருவர் என்பதை யாரும் மறுக்க இயலாது. வரலாறு எப்போதும் மறைக்க முடியாத ஒரு உண்மை. இது பற்றி தான் பேசிய கருத்து யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறேன் என்கிற கருத்தை முதலமைச்சரும் வெளியிட்டிருக்கிறார். உள்நோக்கத்தோடு சொல்லப்பட்டது அல்ல என்றும் கூறியிருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அதை சுட்டி காட்டி இருக்கிறோம்” என்று கூறினார்.
