விஜய் மகன் சஞ்சயின் முதல் படம் எப்படிப்பட்ட கதை தெரியுமா? ‘சிக்மா’ படத்தின் ரகசியங்கள் இதோ!

இயக்குனர் கனவும் தூண்டுதலும் :

கனடாவில் பயின்ற சஞ்சய் ” சிட்டி ஆஃப் காட் ‘ ( City of God ) என்ற பிரசேலியத் திரைப்படத்தைப் பார்த்த பிறகே இயக்குனர் ஆக வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.._தான் ஒரு இயக்குநராக ஆக வேண்டும் என்ற ஆசையில் 2022 ல் ” புல் தி ட்ரிக்ர்” ( Pull the trigger ) என்ற குறும்படத்தை முதலில் இயக்கி பயிற்சி பெற்றதாக பகிர்ந்து உள்ளார்..

கதையைக் கேட்டவுடன் எந்த நிபந்தனையும் இன்றி முழு சுதந்திரம் கொடுத்து படத்தை இயக்க லைக்கா நிறுவனம் என்னை ஊக்குவித்தது”:என ஜேசன் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார்..

படப்பிடிப்பு அனுபவம் :

சேலம் மற்றும் பிரம்மாண்டமான ஜவுளிக்கடை பார்க்கிங் தளங்களில் அமைக்கப்பட்ட செட்களில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன..

படப்பிடிப்பு தளங்கள் & பிரம்மாண்டம் :

சென்னை, சேலம்,தலகோனா (Thalakona) போன்ற இந்திய இடங்கள் மட்டும் அல்லாமல், தாய்லாந்து (Thailand) நாட்டின் பல அழகிய பகுதிகளிலும் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது..

​ஜேசன் சஞ்சய் விளம்பரப் பேச்சுகளைத் தவிர்த்து அமைதியாகவும் நிதானமாகவும் பேசி தனது படைப்பின் வழியே திறமையை வெளிப்படுத்த விரும்பும் இயல்பு கொண்டவர்..ஸ்டார் கிட் என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது சொந்த உழைப்பாலும் சினிமா மீதான காதலாலும் இயக்குநராக உருவெடுத்துள்ள ஜேசன் சஞ்சயின் “சிக்மா” நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜேசன் சஞ்சய் தன் தனித்துவமான திறமையாலும் உழைப்பாலும் சினிமா உலகில் தனக்கென அடையாளத்தை உருவாக்கி, உண்மையான சிக்மா நாயகனாக மிளிர வாழ்த்துக்கள்!!

Source link