செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தில் வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர். இப்படம் கடலில் நடக்கும் பாய்மரப் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்த நிலையில் இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சூரியின் ரசிகர்கள் திரையரங்கு வளாகத்தில் பேனர் வைத்தும் பட்டாசு வெடித்து படத்தை வரவேற்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் தாரதப்பட்டை முழங்க புலியாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கொண்டாட்டங்களும் அரங்கேறியது. இதன் நடுவே சூரி அந்த திரையரங்கிற்கு வருகை தந்தார். பின்பு நாயகி மஹிமா நம்பியாரும் வருகை தந்தார். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இதையடுத்து படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனிடையே சூரி மற்றும் படக்குழுவினருக்கு திரை பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன், “மண்டாடி படத்திற்குச் சிறப்பான வரவேற்பு. சூரி அண்ணனின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் தளராத அர்ப்பணிப்புக்கு உண்மையான பலன் கிடைத்துள்ளது. நல்ல கதைக்களம் எப்போதும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். இந்த மாபெரும் வெற்றிக்கு என் அன்பு அண்ணனுக்கும், ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Great reports for #Mandaadi 💥💥🔥🔥👏👏👍👍@sooriofficial annan’s hard work, persistence and relentless dedication have truly paid off. Good content always wins big! Congrats, my dear annan, and the entire team, on the blockbuster success 🤗❤️
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 10, 2026
