பாண்டிக்கு குட்பை: பிக் பாஸ் என்பது வெறும் ஷோ இல்லை நம் வாழ்க்கையை நல்லவிதமாக மாற்றப் போகும் பாக்கியம் என நினைத்து வந்தவர் தான் பிளாக் பாண்டி. 28 வருட போராட்டத்திற்கு ஒரு முடிவு வரப் போகிறது என்று நம்பிக்கையுடன் வந்த இரண்டு நாட்களில் பார்வையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்தார்.
பாண்டி நடந்து கொள்வதை பார்த்தால் கடைசி வரை தாக்குப்பிடிப்பார் போலயே என பிக் பாஸ் பார்வையாளர்களும் பாராட்டினார்கள். இந்நிலையில் அவருக்கு ஷுகர் பிரச்சனை அதிகரிக்கவே இனியும் இந்த வீட்டில் அவர் தங்கியிருந்தால் ஆபத்தாகிவிடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.பாண்டியின் மனைவி உடன் இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கலந்து பேசி அவரை பிக் பாஸில் இருந்து அனுப்பி வைப்பது என முடிவு செய்தார்கள்.
பிக் பாஸ் அறிவுரை: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என அழுதார் பாண்டி. ஒரேயொரு சான்ஸ் கொடுங்க பிக் பாஸ். ஒரு வாரம் இங்கேயே இருந்து சிகிச்சை பெறுகிறேன். என்னை போக மட்டும் சொல்லாதீங்க என்று அழுது புலம்பினார். நான் உங்கள் அப்பா ஸ்தானத்தில் இருந்து சொல்கிறேன் பாண்டி. உயிர், உடல்நலம் தான் முக்கியம். இதை ஒரு முடிவாக பார்க்காமல் கிளம்பிப் போங்க என தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார் பிக் பாஸ்.
வந்தார் மணி: வீட்டில் ஆள் எண்ணிக்கை குறைந்ததும் புது வரவாக மணிவண்ணன் அதாங்க பிக் பாஸ் தி காமன்மேனில் வெற்றி பெற்று கிராண்டு லான்ச் மேடை வரை வந்து வாசலை தவறவிட்டவர். அவரை தான் ஒயில்டு கார்டு மூலம் பாண்டிக்கு பதில் அழைத்து வந்திருக்கிறார்கள். என்னாது அதுக்குள்ள புது ஆள் வந்தாச்சா என ஷாக் ஆக வேண்டாம். பிக் பாஸ் லைவ் பார்த்தால் இது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.
மணிவண்ணனை லைவில் பார்த்தவர்கள் தற்போது கேட்கும் கேள்வி இது தான். பாண்டிக்கு ஷுகர் என்று சொல்லித் தானே அவரை வெளியேற்றினீர்கள் பிக் பாஸ். இப்போ உள்ளே வந்திருக்கும் மணிவண்ணனுக்கும் ஷுகர் இருக்கிறதே. இவர் மட்டும் எப்படி தாக்குப்பிடிப்பார் என கேட்கிறார்கள். பாண்டிக்கு ஷுகர் லெவல் ரொம்பவே அதிகமாக இருந்ததால் வெளியேற்றினார்களாம். அதற்காக ஷுகர் இருக்கும் யாரையும் பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்ப மாட்டோம் என சொல்லவில்லை என்கிறார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க கேப்டன் சாதிகாவிடம் வாயை கொடுத்து வம்பிழுத்துக் கொண்டே இருக்கும் முனியம்மாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அவரோ தனக்கு தண்டனை கொடுக்கப்பட்டதாக நினைத்தது மாதிரி தெரியவில்லை. வீட்டிற்கு வெளிப்புறத்தில் கயித்து கட்டிலில் ஜாலியாக படுத்து ரிலாக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்.
சபாநாயகர் சாதிகா: பிக் பாஸ் வீட்டில் ஜனநாயக அறை இருக்கிறது அல்லவா?. இன்று அந்த அறையில் கேள்வி நேரம் நடக்கும் என ஹவுஸ்மேட்ஸிடம் கூறியிருக்கிறார் பிக் பாஸ். இதையடுத்து அறை ரெடி, ஆளும் அணி, எதிரணி ரெடி, ஆனால் சபாநாயகர் இல்லையே என கேட்டார் சாதிகா.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
உடனே பிக் பாஸோ அந்த சபாநாயகரே நீங்க தாம்மா சாதிகா என்று சொல்லி அவரை வெடக்கப்பட வைத்துவிட்டார். அடடே வெளியே பிரபாகர் ஐயா, உள்ளே சாதிகாவா, பேஷ் பேஷ் நல்லா இருக்கிறது. அப்படினா பிக் பாஸ் வீட்டில் விஜய்ணா யார், உதய்ணா யார் என்று எல்லாம் மக்கள் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். தளபதி விஜய் முதல்வரான பிறகு சட்டசபை கூடினால் டிவி முன்பு அனைவரும் ஆஜராகிவிடுவதன் எஃப்கெட் தான் பிக் பாஸ் வரை வந்திருக்கிறது.
Source link
