Ashtama Shani For Leo 2026,சிம்ம ராசிக்கு அஷ்டமச் சனி எப்போது விலகும்? அடுத்த 2 ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் பலன்கள் – when will ashtama shani end for leo? what the next two years may bring for leo zodiac sign

சனி பெயர்ச்சி 2027

சனி பகவான் தற்போது மீன ராசியில் இருக்கிறார். இவர் 2027 ஜூன் 3ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக கும்ப ராசி ஏழரை சனியில் இருந்து விடுபட உள்ளனர். அதே சமயம் ரிஷப ராசிக்கு ஏழரை சனியின் முதல் பகுதி தொடங்கப் போகிறது.
இது போன்ற நிலையில் சிம்ம ராசியினர் அஷ்டம சனியில் இருந்து விடுபட உள்ளனர். அதன் பின்னர் சனி பகவானின் குறைவான அசுப பலனை தரக்கூடிய லாப சனி தொடங்க உள்ளது. இதன் காரணமாக 2027-28ம் ஆண்டு காலத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் நன்மைகள் பெற உள்ளனர்.

சனி பெயர்ச்சி மற்றும் வக்ர நகர்வு 2027

2027 ஜூன் 3ஆம் தேதி சனி மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் மூலம் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி விலகுகிறது.

அதே சமயம் அவர் 2027 ஆகஸ்ட் 9ம் தேதி மேஷ ராசியில் மேஷ ராசியில் வக்ரபெயர்ச்சியை மேற்கொள்வதால் 2027அக்டோபர் 20ஆம் தேதி மீண்டும் மீன ராசி நுழைய உள்ளார்.

டிசம்பர் 24ஆம் தேதி சனி வக்ர நிவர்த்தியாகி, நேர்முகமாக சனி பயணத்தை தொடங்கி 2028 பிப்ரவரி 23ஆம் தேதி மீண்டும் மேஷ ராசியில் சனி நுழைவு உள்ளார். இந்தக் காலத்தில் சிம்ம ராசிக்கு அஷ்டம சனி தொடரும்.

2028 ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் சனி வக்கிர நகர்வை மேற்கொண்டாலும் அவர் மேஷ ராசியிலேயே இருப்பார் மீன ராசிக்கு வரமாட்டார்.

சிம்ம ராசிக்கு அஷ்டம சனி பலன்கள்

2027 ஜூன் மாதம் 3ம் தேதி வரை சிம்ம ராசியை சேர்ந்தவர்கள் அஷ்டம சனி பலனை அனுபவிக்க உள்ளனர். இதனால் தங்களுடைய குடும்ப சூழல், பணியிட சூழல், குழப்பங்கள் காரணமாக தேவையற்ற மன உளைச்சலை சந்திக்க நேரிடும். இவர்கள் செய்யக்கூடிய தொழில், வியாபாரத்தில் அதிக சங்கடங்கள், திடீர் தடைகளை எதிர்கொள்ள நேரிடும்.

உடலுறவு செய்யும் போது பாதிக்கும் என்பதால் திட்டமிட்ட காரியத்தை முடிப்பது சவாலாக இருக்கும். இது போன்ற விஷயங்களும் உங்களுக்கு அனுபவத்தை கற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.

அஷ்டம சனி உள்ள அன்பர்கள் சிவபெருமானையும், அனுமனையும் தினமும் வழிபாடு செய்வது உங்களுடைய மன அமைதியையும், மன உறுதியை தரக்கூடியதாக இருக்கும்.
மேலும் உங்களுடைய செயல்பாடுகளில் ஒழுக்கத்தையும், தேவையான நண்பர்களுக்கு குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது நன்மை தரும்.

பாக்கிய சனி பலன் பெறப் போகும் சிம்ம ராசி

சிம்ம ராசியை சேர்ந்தவர்களுக்கு அடுத்து பாக்கிய சனி பலன்களை பெற உள்ளனர். இந்த காலத்தில் உங்களுடைய முன்னோர்கள் மற்றும் தந்தையின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெறுவீர்கள்.
உங்கள் தந்தையுடன் கருத்து முதல்களை தவிர்க்கவும். அவருடைய உடல்நிலை பிரச்சினைகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

வேலை தொழில் நிமித்தமாக தூர பயணங்கள் மேற்கொள்ள வா நேரிடும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். அதே சமயம் எதிர்பாராத செலவுகள் சில சிரமங்களை தர கூடும். திட்டமிடாத வேலையில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.

சிவ வழிபாடு செய்வதும், சிவன் கோயிலில் உழவாரப்பனையும் மேற்கொள்வது நன்மை தரும். அன்னதானம் செய்வது நல்லது.

Source link