சூர்யா, விஷால் படங்களுடன் மோதும் பரத்: இந்த வார ஓ.டி.டி.யில் இந்த படங்களை மிஸ் பண்ணிடாதீங்க

ஓடிடியில் வெளியாகும் 6 திரைப்படங்கள், வெப் தொடர்கள்… செப்டம்பர் 11-ல் என்னென்ன பார்க்கலாம்?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் மட்டுமின்றி, புதிய வெப் தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், வரும் செப்டம்பர் 11ஆம் தேதி பல்வேறு மொழிகளில் உருவான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.

வீரபத்ருனி ரகசியம் (Veerabhadruni Rahasyam)

தெலுங்கில் வெளியான க்ரைம், மிஸ்ட்ரி மற்றும் திரில்லர் வெப் தொடரான வீரபத்ருனி ரகசியம் (‘Veerabhadruni Rahasyam’) ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இத்தொடரின் முதல் சீசனின் பாகம் 2, வரும் செப்டம்பர் 11ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான குடும்ப திரைப்படம் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது. தற்போது இப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

மகுடம்

விஷால் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான படம் மகுடம்.  அஞ்சலி நாயகியாக நடித்துள்ள இந்த படம், ஆக்ஷன், திரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டது. ‘மகுடம்’ திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில், இப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. செப்டம்பர் 11ஆம் தேதி ப்ரைம் வீடியோ தளத்தில் ‘மகுடம்’ வெளியாகிறது.

பஞ்சனாமா (Panchanama)

நடிகர் பரத் நடிப்பில் தெலுங்கில் உருவான மிஸ்ட்ரி மற்றும் திரில்லர் வெப் தொடரான பஞ்சனாமா (Panchanama), விசாரணையை மையமாகக் கொண்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. சுவாரஸ்யமான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் தொடராக உருவாகியுள்ள இது செப்டம்பர் 11ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

வரவு (Varavu)

மலையாளத்தில ஜோஜு ஜோர்ஜ், சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான மலையாள ஆக்ஷன், திரில்லர் திரைப்படம் ‘வரவு’ அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பரபரப்பான திரில் சம்பவங்களுடன் உருவாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

ப்ரின்ஸ் ஆப் மல்லிவுட் (Prince of Mollywood)

மலையாளத்தில் உருவான காமெடி வெப் தொடரான ப்ரின்ஸ் ஆப் மல்லிவுட் (‘Prince of Mollywood’) ஒரு பணக்காரரின் மகன் நடிகராக வேண்டும் என்ற ஆசையை மையமாகக் கொண்ட கதையைச் சொல்கிறது. நகைச்சுவை மற்றும் ஃபீல் குட் அம்சங்களுடன் உருவாகியுள்ள இந்தத் தொடர் செப்டம்பர் 11ஆம் தேதி ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Source link