புதுடில்லி: ‘ஆப்பிள்’ நிறுவனத்தின், ‘ஐபோன் 18’ மாடல் மொபைல் போன்கள் அறிமுகமாகியுள்ளன. இதன் விலை உலகளவில் இந்தியாவில் தான் மிக அதிகமாக உள்ளது.
‘ஆப்பிள்’ நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள, ‘ஐபோன் 18 சீரிஸ்’ மாடல்களில், ‘ஐபோன் 18 புரோ, புரோ மேக்ஸ்’ மற்றும் மடிக்கக்கூடிய, ‘ஐபோன் டுயோ’ ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் ஐபோன் டுயோவின் இந்திய விலை 2.99 லட்சம் ரூபாய். ஐபோன் 18 புரோவின் விலை 1.65 லட்சம் ரூபாய், ஐபோன் 18 புரோ மேக்ஸ் விலை 1.79 லட்சம் ரூபாய். இதே மாடல் போன்கள், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இந்தியாவை விட விலை குறைவாக உள்ளது. அதே போல் முந்தைய ஐபோன் மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணம் குறித்து துறை நிபுணர்கள் கூறியதாவது:
ஐபோன் டுயோ விலை அதிகம் இருப்பதற்கு காரணம், முழுமையாக அது சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதால் இந்தச் செலவு ஏற்படுகிறது. மேலும், கடந்த ஓராண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 7 சதவீதம் சரிந்திருப்பதும் ஐபோன் 18 புரோ மற்றும் புரோ மேக்ஸ் விலை அதிகமானதற்கு காரணம்.
இது தவிர உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரிகள் காரணமாக, இந்திய ஐபோன் விலைகள் அமெரிக்க விலையைவிட அதிகமாக உள்ளன.புதிய ஐபோன்கள் மட்டுமின்றி, ஏற்கனவே விற்பனையில் உள்ள பழைய மாடல்களின் விலையையும் ஆப்பிள் உயர்த்தியுள்ளது. ஏ.ஐ., நிறுவனங்களுக்கான, ‘சிப்’ தேவை பல மடங்கு உயர்ந்ததால் உலகளவில் சிப்களுக்கான விலை அதிகரித்துள்ளது. அதன் தாக்கம் பழைய ஐபோன் மாடல்களிலும் பிரதிபலிக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐபோன் 18 விலை குறைவாக உள்ள நாடுகள்
எண் -நாடு -ஐபோன் 18 புரோ- ஐபோன் 18 புரோ மேக்ஸ்- ஐபோன் டுயோ
1. -கனடா- ரூ.1.10 லட்சம் -ரூ.1.40 லட்சம்- ரூ.2.06 லட்சம்
2. -அமெரிக்கா -ரூ.1.14 லட்சம் -ரூ.1.23 லட்சம் -ரூ.1.90 லட்சம்
3. -ஜப்பான் -ரூ.1.18 லட்சம் -ரூ.1.28 லட்சம் -ரூ.2.26 லட்சம்
4. -சிங்கப்பூர் -ரூ.1.24 லட்சம் -ரூ.1.35 லட்சம் -ரூ.2.33 லட்சம்
5. -அரபு எமிரேட்ஸ் -ரூ.1.31 லட்சம் -ரூ.1.42 லட்சம்- ரூ.2.20 லட்சம்
6. -மலேசியா -ரூ.1.40 லட்சம்- ரூ.1.51 லட்சம் -ரூ.2.22 லட்சம்
