சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை, வரும் அக்டோபர் மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு அதிகாரிகள் அனைவரும் தங்களின் சொத்து மற்றும் கடன் விபரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.

அதன்படி, 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரையிலான சொத்து மற்றும் கடன் குறித்த விபரங்களை, அனைத்து அரசு அதிகாரிகளும, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைப்பு (IFHRMS) என்ற இணையதளத்தின் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு அதிகாரிகள் தங்களின் வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் மற்றும் வாகனங்கள், நகைகள், வங்கி டெபாசிட் தொகை போன்ற அசையும் சொத்துக்களின் விபரங்களை வரும் அக்டோபர் மாதத்திற்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்களின் கடன் சார்ந்த விபரங்களையும் அரசு ஊழியர்கள் சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்கத் தவறினால், அது நடத்தை விதிகளை மீறியதாகக் கருதப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source link