கோரிக்கைகள் எல்லாம் நிறைவேறுமா? அரசு ஊழியர்களுக்கு எல்லாம் கிடைக்குமா? 8ஆவது ஊதியக் குழுவின் மீது எகிறும் எதிர்பார்ப்புகள்.
சென்னையில் தற்போது நடந் த 8ஆவது ஊதியக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் கூட்டம்!
8வது ஊதியக் குழுவின் சென்னை கூட்டம் பல முக்கிய கோரிக்கைகளுடன் நிறைவடைந்துள்ளது. அதில் ஒரு குழு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அதுதான் சென்னை ஜி.பி.ஓ. ஓய்வூதியதாரர்கள் மன்றம் (Chennai GPO Pensioners’ Forum). அவர்களின் கோரிக்கைகள் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இந்தக் கூட்டத்தில் ஐந்து முக்கியமான கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
பழைய ஓய்வூதியத் திட்டம்!
8ஆவது ஊதியக் குழுவின் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது புதிய கோரிக்கை அல்ல. நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் இதற்காக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். சென்னையில் நடந்த கூட்டத்தில் இந்த மன்றம் இதனைத் தனது முதன்மைக் கோரிக்கையாக முன்வைத்தது.
ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம்!
ஓய்வுபெற்ற ஊழியர்களும் அவர்களின் குடும்பத்தினரும் கூடுதல் நிதிப் பாதுகாப்பைப் பெற விரும்புகின்றனர். எனவே, இரண்டையும் உயர்த்தி வழங்குமாறு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டனர்.
தெளிவான விதிமுறைகள் தேவை!
பல ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தில் ஒரு பகுதியை முன்கூட்டியே பெற்றுக்கொள்கிறார்கள். அந்தத் தொகையைத் திரும்பப் பெறும் விதிமுறைகள் தெளிவாக இல்லை. எனவே, இந்த மன்றம் தெளிவான விதிகளையும் நிவாரணத்தையும் கோருகிறது.
MACP பலன்களில் திருத்தம்!
மேம்படுத்தப்பட்ட உறுதிப்படுத்தப்பட்டப் பணியிட உயர்வுத் திட்டத்தில் (Modified Assured Career Progression scheme) திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக அஞ்சல்துறை ஊழியர்கள் சிறந்த பதவி உயர்வுகளையும் மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களையும் கோருகின்றனர்.
சிறந்த படிகள், விடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு!
ஓய்வூதியதாரர்கள் மற்றும் பணியில் உள்ள ஊழியர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட படிகள், விடுப்பு விதிகள் மற்றும் வலுவான சமூகப் பாதுகாப்பு ஆகியவை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
வேறு என்ன விவாதிக்கப்பட்டது?
ஓய்வூதியம் மட்டுமில்லாமல் வேறு சில விவகாரங்களும் விவாதிக்கப்பட்டன. அடுத்த ஊதியக் குழுவுக்காக ஒரு தசாப்த காலம் காத்திருக்கத் தேவையில்லாத வகையில், நிரந்தர ஊதிய திருத்த நடைமுறையை உருவாக்குமாறு பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனர். அவர்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 68,000 கோரியுள்ளனர். மேலும், தற்போதைய ஊதிய மேட்ரிக்ஸுடன் சேர்த்து இயக்க விகிதங்களை அமல்படுத்தவும் கேட்டுள்ளனர்.
பெண் ஊழியர்களுக்கு முக்கியத்துவம்!
பணி உயர்வு குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் பெண் ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிறப்புக் தேவைகள் குறித்தும் பேசப்பட்டது. லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் எதிர்காலத்தை 8வது ஊதியக் குழு தீர்மானிக்கவுள்ளது. இதன் அறிக்கை எதிர்கால ஊதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் தொழில் வளர்ச்சியை வடிவமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசின் கையில் இறுதி முடிவு!
இந்த கோரிக்கைகள் எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவை கோரிக்கைகளே தவிர முடிவுகள் அல்ல. ஆணையம் இவற்றை பரிசீலிக்க வேண்டும், மேலும் அது பரிந்துாரிக்கும் எதன் மீதும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியரசா ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம் 2025 நவம்பர் 3 அன்று அமைக்கப்பட்டது. இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க அதற்கு 18 மாத அவகாசம் உள்ளது.
