இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என முனைப்பில் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக சார்பில், மதுராந்தம் தொகுதியில் பரந்தாமன் போட்டியிடவுள்ளதாகவும், தாராபுரம் தொகுதியில் சுகன்யா போட்டியிடவுள்ளதாகவும் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், மதுராந்தம் தொகுதியில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு வேட்பாளர் பரந்தாமனை அறிமுகம் வைத்து தேர்தல் பரபரப்புரையை தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “மிசா குறித்து எவனோ எழுதி கொடுத்தை படித்துவிட்டு சட்டசபையில் ஒரு தற்குறி பேசுகிறார். மனைவிக்கும் பிள்ளைக்கும் சோறு போடாத வக்கில்லாதவர்கள் எல்லாம் பேசுகிறார்கள். மு.க.ஸ்டாலினின் கால் செருப்பு தூசுக்கு நீ ஈடாவீயா? தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே தலை சிறந்த முதலமைச்சர் என்ற சொல்லக்கூடிய அளவுக்கு மு.க.ஸ்டாலின் வளர்ந்தார். அந்த தலைவரைப் பற்றி கட்சிக்காரர்கள் சிந்திக்க வேண்டும்.
கலைஞரைப் பற்றி இழிவாகப் பேசியதையும், மு.க.ஸ்டாலினைப் பற்றி இழிவாகப் பேசியதையும் மனதில் வைத்துக்கொண்டால் நிச்சயமாக மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமன் மிகப்பெரிய வெற்றி பெறுவார். சட்டசபைக்கு பரந்தாமன் போன்ற ஒரு ஆள் தேவை. அவர் இப்போது சட்டசபைக்கு சென்றால் மூன்று மாதத்துக்குள்ளேயே இந்த ஆட்சியை கவிழ்க்க எல்லா வேலைகளையும் செய்வார். ஜனவரிக்குள் இந்த ஆட்சி கவிழ்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்று பேசினார்
