விஜய் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால்.. தவெக தலைமையிலான புதிய கூட்டணியை கடுமையாக விளாசிய முரசொலி – murasoli severely criticized tvk led political alliance in tamil nadu

தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் புதிய கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தவெக தலைமையில் மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த கூட்டணி தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்புதிய கூட்டணியை திமுகவின் முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

தவெகவின் புதிய கூட்டணி

அதாவது சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக கூட்டணியை கல்லாப்பெட்டி கூட்டணி என தவெக தலைவர் விஜய் கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். தொடர்ந்து தேர்தல் பரபரப்புகளில் திமுக கூட்டணி குறித்து அடுக்கடுக்காக விமர்சித்தார். இப்படியான நிலையில் திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளை வைத்தே தவெக புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளதை திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். கல்லாப்பெட்டி கூட்டணி என சொல்லிவிட்டு தற்போது அவர்களுடனே கூட்டணி அமைத்துள்ளது எந்த கணக்கில் சேரும் என்றெல்லாம் இணையத்தில் கேள்விகளை அடுக்கி கொண்டிருக்கின்றனர்.

முரசொலி கடும் விமர்சனம்

இந்நிலையில் தான் தவெகவின் புதிய கூட்டணியை திமுகவின் முரசொலி நாளிதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. அதாவது, யாரையெல்லாம் கல்லாப்பெட்டி கூட்டணி என விஜய் சொன்னாரோ, அவர்களை சேர்த்து வைத்துக்கொண்டு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என்று பெயர் வைத்துள்ளார். அப்படியானால் விஜய் வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அவர்களை கல்லாப்பெட்டி கூட்டணிக் கட்சிகள் என்றுதானே சொல்ல வேண்டும்.

பலரோடு சேர்ந்த மற்றும் சிலராக விஜய் ஆகிவிட்டார்

இந்தக் கட்சிகளின் பெயரை கூட உச்சரிக்கும் அளவிற்கு தகுதியற்றவர்கள் என்று நினைத்தவர்தான் விஜய். இந்தக்கட்சிகளை மற்றும் பலர் என்றுதான் விஜய் அழைத்தார். இந்த மற்றும் பலரை சேர்த்துக் கொண்டுதான் தம்ஸ் அப் காட்டுகிறார். மற்றும் பலரோடு சேர்ந்த மற்றும் சிலராக விஜய் ஆகிவிட்டார் என கடும் விமர்சனங்களை முரசொலி நாளிதழ் முன்வைத்துள்ளது. அதோடு அறிவாலயம் வாசல் வழியாக சென்றாலே அந்த கட்சிகளை அழைத்து உள்ளே போட்டு சீட்டுக் கொடுத்து விடுவார்கள் என்று விஜய் சொனார்.

காங்கிரஸ் விலை போய்விட்டது

திமுகவிடம் காங்கிரஸ் கட்சி விலை போய்விட்டது என்று விஜய் உளறினார். இப்போது காங்கிரஸ் கட்சியை எதைக் கொடுத்து விலைக்கு வாங்கி இருக்கிறார். சில பல கோடிகளை கொடுத்து தமிழ்நாடு காங்கிரஸை தனது பைக்குள் ஸ்டாலின் போட்டுக்கிட்டார் என்று பேசினார். இப்போது எத்தனை கோடியை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்து கூட்டணிக்கு கை கொடுக்க வைத்துள்ளார் என கேள்விகளை முரசொலி அடுக்கியுள்ளது.

விசிக திருமாவளவன்

மேலும், விஜய் குறித்து தேர்தல் பரப்புரையின் போது திருமாவளவன் பேசியது பற்றியும் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது விஜய் பாஜக குறித்து ஏன் பேசுவது இல்லை. திமுக கூட்டணியில் எங்களை பிரிக்க துடிக்கிறார்கள். எங்கள் கூட்டணியை உடைக்க நினைக்கிறார். மக்களுக்கான எந்த திட்டத்தையும் விஜய் பேசவில்லை. இன்று அவருடனே தம்ஸ் அப் காட்டிக் கொண்டிருக்கிறார் என அடுக்கடுக்கான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலை புது கட்சி.. இது தான் காரணமா?

மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி

அதோடு சந்தர்ப்பவாதம் ஒவ்வொருவர் முகத்திலும் தெரிகிறது. இவர்கள் எல்லாம் சேர்ந்து தான் போட்டோ சூட்டிங்கில் பங்கெடுத்துள்ளார்கள். விஜய் இப்போது அமைத்திருப்பது மனசாட்சியற்ற – சந்தர்ப்பவாத – கல்லாப்பெட்டி கூட்டணி என்று அழைப்பதே பொருத்தமானது எனவும் முரசொலி நாளிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link