காலம் மாறியது! திரை போட்டியும் முடிந்தது. நட்புடன் அஜித் கார் ரேசை துவக்கி வைக்கும் விஜய்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் லண்டன் புறப்பட்டுள்ளார் . அவருடன் தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் ஒரு சிலரும் உடன் சென்றுள்ளனர். இது விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பின் செல்லும் முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாகும். சர்வதேச அளவில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து பேசவும், தமிழ்நாட்டுக்கு தேவையான முதலீடுகளை கொண்டு வருவதற்கும் இந்த பயணம் உதவும்.

முதல்வரின் இந்த அதிகாரப்பூர்வ பயணம் செப்டம்பர் 16ஆம் தேதி வரை நீடிக்கிறது. லண்டனில் தங்கும் அவர் அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் மற்றும் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். இதை தொடர்ந்து இங்கிலாந்தின் புகழ்பெற்ற

சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடைபெறவுள்ள, லெ மான்ஸ் கோப்பை சர்வதேச கார் பந்தயப் போட்டியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.

Source link