வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாள் வேலையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி யூகோ தலைமை வங்கி அலுவலகம் முன்பாக 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருங்கிணைப்புத் தலைவர் நிதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தால் புதுச்சேரியில் சுமார் 200 கோடி ரூபாய் வரையிலான வங்கி வர்த்தகம் முடங்கியுள்ளது.
புதுச்சேரியில் 500-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் வாரத்தில் ஐந்து நாள் வேலை உடனடியாக அமல்படுத்த வேண்டும்,வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கோரிக்கைகளை தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி நான்கு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்திருந்தது.
அதன்படி பணிகளை புறக்கணித்த வங்கி ஊழியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் புதுச்சேரி யுகோ வங்கி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பு தலைவர் நிதீஷ் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/09/11/pdy-bank-staff-protest-4-2026-09-11-12-15-37.jpeg)
இது குறித்த ஊழியர்கள் கூறும் போது, வங்கி ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் புதுச்சேரியில் மட்டும் 200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார், போராட்டத்திற்கு பிறகும் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி
