நாதக இடைத்தேர்தல் வேட்பாளர்கள் செப்டம்பர் 13-ல் அறிவிப்பு

தாராபுரம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் வரும் 13ஆம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் மாதம் நடைபெற்ற 17-வது சட்டமன்ற தேர்தலில் விஜய் த.வெ.க. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது.

அதன் பின் முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தான் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரு தொகுதிகளில் திருச்சி கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.

அதேவேளையில், அ.தி.மு.க.வைச் சேர்ந்த மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார் (பெருந்துறை), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), சி. விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர். விஜயபாஸ்கர் (கரூர்) ஆகிய 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் தமிழகத்தில் மொத்தம் 7 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

Source link