சென்னை: “சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!” என இமானுவேல் சேகரனாருக்கு முதல்வர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “சமூக நீதி, சமத்துவம் மற்றும் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்து, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த வீரத் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!
இளமையிலேயே நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும், சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான சமூக நீதிப் போராட்டத்திலும் களம் கண்டவர் இமானுவேல் சேகரனார். சமத்துவமும், சுயமரியாதையும் நிறைந்த சமுதாயத்தைப் படைக்க அவர் காட்டிய வழியில் நடைபோட இந்நாளில் உறுதியேற்போம்!” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
