#BIG BREAKING : புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்..!

புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் முன்னாள் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90)  இன்று (செப்.11) வயது மூப்பு காரணமாக காலமானார். 1936ஆம் ஆண்டு பிறந்த இவர், தமிழறிவு, நகைச்சுவை மற்றும் சிறப்பான பேச்சாற்றலால் பட்டிமன்ற உலகில் தனக்கென தனி இடத்தைப் பெற்றவர். தொலைக்காட்சி பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழக மக்களிடையே மிகவும் பிரபலமானார். சாலமன் பாப்பையாவின் மறைவு தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராக வலம் வந்த அவர் 13,000 பட்டிமன்றங்களில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். டிவி மட்டுமின்றி சினிமாவிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். புது வருஷம், பாய்ஸ், எஸ் மேடம், சிவாஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சிவாஜி படத்தில் பக்கத்துவீட்டுக்காரர் கதாபாத்திரத்தில் இவரது நடிப்பு இன்றும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையை கொண்டிருக்கும்.

Source link