சென்னை: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
‘வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை வழங்க வேண்டும். சாதாரண ஊழியர்களுக்கு காட்டப்படும் பாரபட்சமான நடவடிக்கையை மாற்ற வேண்டும்’ உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள், இன்று ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வங்கி அலுவலகம் முன்பு கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் எனக்கோரி கோஷம் போட்டனர். டில்லி, போபால், சென்னை, சிலிகுரி, ராஜ்கோட் மற்றும் விஜயவாடா என நாட்டின் பெரும்பாலான நகரங்களில் ஊழியர்கள் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 8 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றதாகவும், போராட்டம் வெற்றிகரமாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியர்களுக்கான தேசிய கூட்டமைப்பு, அகில இந்தியவங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு, இந்திய தேசி யவங்கி அதிகாரிகள் மாநாடு, இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகிய சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இன்று போராட்டம் காரணமாக வங்கி சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் கிழமை விநாயகர் சதுர்த்தி என, நான்கு நாட்கள் வங்கிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
