நடிக்க மறுத்த சாய் பல்லவி; சோலோ ஹீரோயினாக களம் இறங்கிய சமந்தா: ‘மா இண்டி பங்காரம்’ உருவானது இப்படித்தான்

2022ஆம் ஆண்டு மயோசிடிஸ் (Myositis) எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா நடிப்பிலிருந்து விலகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். குறிப்பாக, சிட்டாடல், ஹனி பென்னி (‘Citadel: Honey Bunny’) படப்பிடிப்பின்போது அவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம், அந்த முடிவை மேலும் உறுதிப்படுத்தியது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:

இதன் காரணமாக கேமராவுக்குப் பின்னால் புதிய வாழ்க்கைக்கு சமந்தா படிப்படியாகப் பழகத் தொடங்கினார். அப்போது அவரது கணவர் ராஜ் நிடிமோரு திடீரென மா இன்டி பங்காரம் (‘Maa Inti Bangaram’) திரைப்படத்தில் நடிக்குமாறு அவரிடம் கேட்டார். முதலில் இந்தக் கதாபாத்திரம் சாய் பல்லவிக்காக எழுதப்பட்டிருந்தது. அதன் பின்னர் சமந்தா நடிப்பில் வெளியான இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்து, அதிக வசூல் செய்த பெண் மையக் கதைக்களம் கொண்ட தெலுங்குப் படமாக சாதனை படைத்தது. 

இதன் மூலம் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘அருந்ததி’ படத்தின் வாழ்நாள் வசூலையும் இப்படம் முறியடித்தது. சமந்தா நடிப்புத் துறையை விட்டு விலகுவது குறித்து தான் சிந்திக்கத் தொடங்கியதற்கான காரணத்தை தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் (The Hollywood Reporter)-க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஒரு வருடம் ஓய்வு எடுத்த பிறகு, வேறு சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. உடல்நலக் காரணங்களுக்காக ஓய்வெடுத்து, வேறு ஏதாவது செய்யுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனால் அந்த ஆலோசனையை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டேன்” என்று சமந்தா தெரிவித்துள்ளார். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அதிக சவால்களை ஏற்படுத்தும் நடிப்புத் தொழிலில் இருந்து சற்று விலகி இருக்க விரும்பிய சமந்தா, குறைவான அழுத்தம் கொண்ட விஷயங்களைத் தேடத் தொடங்கினார்.

நான் உண்மையாக நம்பக்கூடிய விஷயங்களைத் தேடிக்கொண்டிருந்தேன். பல, பல நிறுவனங்களில் முதலீடு செய்தேன். நான் ஒரு தொடர் தொழில்முனைவோர் என்று கூட சொல்லலாம்” என அவர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். காலப்போக்கில் கேமராவுக்குப் பின்னால் தனது வாழ்க்கையை சமந்தா ரசிக்கத் தொடங்கினார். அதே நேரத்தில் மீண்டும் கேமராவை எதிர்கொள்வது குறித்து அவருக்குள் தயக்கமும் இருந்தது.

மீண்டும் திரையில் நடிப்பது குறித்து எனக்கு ஒரு தயக்கம் இருந்தது. குறிப்பாக ‘சிட்டாமல்’ படப்பிடிப்பின்போது நான் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன். அது எனக்கு இனிமையான அனுபவமாக இல்லை. என்னால் முழு படக்குழுவும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுவதையும், மற்றவர்களின் நேரம் வீணாவதையும் நான் விரும்பவில்லை. அதனால் மா இண்டி பங்காரம் படத்தை நானே தயாரிக்கலாம் என்று நினைத்தேன். 

தயாரிப்பாளராக இருந்து, கேமராவுக்குப் பின்னால் பணியாற்றுவதில் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று முடிவு செய்தேன். நான் உண்மையாக நம்பும் சிறந்த படங்களை உருவாக்கி, அந்த முடிவுடன் சமாதானமாக இருந்தேன்” என்று சமந்தா கூறியுள்ளார். ஆனால் ராஜ் நிடிமோருவின் வேறு திட்டம் இருந்தது. சமந்தாவை மீண்டும் நடிப்புக்கு அழைத்து வந்ததற்கான பெருமையை ராஜுக்கே சமந்தா வழங்கினார்.

இது குறித்து பேசிய அவர், “அவர் வேறு விதமாக முடிவு செய்தார். ஹிமாங்க் மற்றும் ராஜுடன் இணைந்து தயாரிப்புப் பணியில் ஈடுபட்டதும், ராஜ் படப்பிடிப்பு தளத்தில் இருந்ததும் எனக்கு தைரியத்தை அளித்தது. ஆரம்பத்தில் சிறிது தயக்கம் இருந்தாலும், இறுதியில் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் அப்படி செய்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் எனக்கு என்னை விட ராஜ்தான் அதிக நம்பிக்கை வைத்திருப்பது போல் தெரிகிறது” என்று சமந்தா தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ‘சிட்டாடல்’ படத்திலிருந்தே விலகிவிடலாம் என்று தான் முடிவு செய்திருந்ததையும் சமந்தா நினைவுகூர்ந்தார். ஆனால் ராஜ் மற்றும் டி.கே. இருவரும் தன்னை விட்டுக்கொடுக்க மறுத்ததாக அவர் கூறினார்.

நான் அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால் அவர்கள் என்னை கைவிடவில்லை. மா இண்டி பங்காரம் படத்திலும் அதேதான் நடந்தது. பல பேட்டிகளில் சமந்தா, படப்பிடிப்புகளுக்கு இடையே சில நேரங்களில் தான் சோர்வடைந்து கீழே விழுந்துவிடுவதாகவும், அது தனது தன்னம்பிக்கையை பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது உடல்நிலை காரணமாக படக்குழுவினர் தனக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் குற்ற உணர்ச்சியும் ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மா இண்டி பங்காரம் படத்தில் நடிக்க ராஜ் தன்னை எவ்வாறு சம்மதிக்க வைத்தார் என்று கேட்கப்பட்டபோது, சமந்தா நகைச்சுவையாக, “முக்கியமாக சாய் பல்லவி நடிக்க மறுத்ததுதான் காரணம் என்று நினைக்கிறேன்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “இந்தக் கதையில் மிகப்பெரிய விஷயம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். பெண்கள் இந்தப் படத்தைப் பார்க்க விரும்புவார்கள் என்பதும் எனக்குத் தெரியும். அதனால் இந்தப் படம் உருவாகாமல் போவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.

படத்தின் மீது சமந்தாவுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தபோதிலும், ரசிகர்கள் படத்தை எவ்வாறு வரவேற்பார்கள் என்பதில் அவருக்கு சந்தேகம் இருந்தது. படத்தின் முன்பதிவு வசூல் நிலவரமும் அவரது கவலையை அதிகரித்தது. மூன்று ஆண்டுகளாக எனது படம் எதுவும் வெளியாகவில்லை. எனவே என்னால் ஒரு டிக்கெட்டைக் கூட விற்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஒரு படம் ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதும் தெரியவில்லை.

படம் வெளியாவதற்கு முன்பு நான் கேட்ட விஷயங்கள் அவ்வளவு ஊக்கமளிப்பதாக இல்லை. இந்த நிலை எங்களுக்கு தெரிந்திருந்தது. எங்களுக்கே என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ளவும் நாங்கள் வெட்கப்படவில்லை. அதனால் படத்தின் பட்ஜெட்டை முடிந்தவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்தோம். நாங்கள் மூவரும் மிகுந்த லட்சியத்துடன் செயல்படுகிறோம். இந்தப் படத்துக்கு தேவையான அனைத்தையும் செய்ய விரும்புகிறோம். ஆனால் பெரிய கனவுகளை அடைய வேண்டும் என்பதற்காக அளவுக்கு மீறி செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை” என்று சமந்தா விளக்கினார்.

தயாரிப்புச் செலவைக் கட்டுப்படுத்துவதற்காக ஒரே நாளில் பல காட்சிகளைப் படமாக்கியதாகவும் சமந்தா தெரிவித்தார். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த அளவுக்கு பணியாற்றினர். அனைவரும் தங்களால் இயன்றதைவிட கொஞ்சம் கூடுதலாக செய்ய விரும்பினர். இது ஒருவருடைய வெற்றி மட்டுமல்ல. இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் இதில் பங்கு உள்ளது. ஏனெனில் இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்குவதற்கு சற்று கூடுதல் நேரமும், பட்ஜெட்டும் தேவைப்படும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் இருந்து பணம் கடன் வாங்கினோம். எங்களுடைய சொந்த பணத்தையும் முதலீடு செய்து இந்தப் படத்தை உருவாக்கினோம்” என்று அவர் கூறினார்.

Source link