கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாற்றம்!

தமிழக அரசின் சார்பில் நிர்வாகக் காரணங்களுக்காக அவ்வப்போது பல்வேறு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதோடு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு மற்றும் கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றன. 

மேலும் மாநில அரசில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய அரசுப் பணிக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் பணியிட மாற்றமும் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் உள்துறையின் சார்பில் நேற்று (10.09.2026) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, திருநெல்வேலி மாநகரத்தின் மேற்குப் பகுதி துணை ஆணையராக பணியாற்றி வந்த அன்ஷுல் நகர், கன்னியாகுமரி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது அங்கு பணியாற்றி வரும் ஆர். ஸ்டாலினுக்குப் பதிலாக இந்தப் புதிய பொறுப்பை ஏற்பார் என்று அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் தெரிவித்துள்ளார்.

Source link