இந்நிலையில் வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த (இன்று – 11.09.2026 மதியம் 02.30 மணியளவில்) அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு சுவாசக் கோளாறு காரணமாகக் கடந்த 09 ஆம் தேதி முதல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதுடன், தகுந்த மருத்துவப் பராமரிப்பின் கீழ் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வி.எஸ்.பாபுவை, அமைச்சர் மரிய வில்சன் நேற்று (10.09.2026) நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பின்னர் மரிய வில்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “வி.எஸ். பாபு நலமுடன் உள்ளார். முதலமைச்சர் விஜய் தொலைப்பேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
