தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் வரும்போது அதிகாரிகள் மாற்றம், புதிய அதிகாரிகள் நியமனம், ஐ,ஏ.எஸ், ஐ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது 2 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், வருவாய் நிர்வாக ஆணையராக சந்திரமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யா, பால் உற்பத்தி துறையின் ஆணையராக சிவராசு, அச்சு மற்றும் எழுதுபொருள் துறையின் ஆணையராக சரவண ராஜ், கைத்தறி மற்றும் ஜவுளித்துறையின் செயலாளராக லில்லி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை செயலாளராக தர்மேந்திர பிரதாப், ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வரிசையில் தற்போது காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் செயலர் மணிவாசன் பிறப்பித்த உத்தரவில், திருநெல்வேலி மேற்கு துணை கமிஷனர் அன்சுல் நாகர், கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்படுகிறார் எனக்கூறப்பட்டு உள்ளது. பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி எஸ்.பி., ஸ்டாலின் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பணியிடம் ஒதுக்கப்படவில்லை.
