ஆர்வத்துடன் காண வந்த ரசிகர்கள் – வேண்டுகோள் விடுத்த அஜித்!

லண்டனில் லீ மேன்ஸ் கப் சில்வர்ஸ்டோன் கார் பந்தயம் இன்று மற்றும் நாளை நடக்கிறது. மொத்தம் 5 கி.மீ. நடக்கும் இந்த ரேஸில் இன்று சோதனை, நாளை காலை தேர்வு மற்றும் மாலை இறுதி ரேஸ் என தொடர்ந்து நடக்கிறது. இதில் நடிகரும் ரேஸருமான அஜித் கலந்து கொள்கிறார். இதனிடையே இப்போட்டியைச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கொடி அசைத்துத் துவங்கி வைக்கிறார் தமிழ்நாட்டு முதல்வர் விஜய். 

சினிமாவில் இரு பெரும் துருவங்களாக இருந்து தற்போது வேறொரு களத்தில் வேறொரு அடையாளத்துடன் இருவரும் சந்திக்கவுள்ளது முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இருவரது ரசிகர்களும் அந்த தருணத்தை நோக்கி ஆவலுடன் இருக்கின்றனர். இந்த நிலையில் ரேஸ் தளத்தில் அஜித்தை காண சில ரசிகர்கள் குவிந்துள்ளனர். அவர்களை பார்த்த அஜித் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

அதில் அவர் தெரித்திருப்பதாவது, “நான் ரொம்ப முக்கியமான ஒரு வேலையைச் செய்கிறேன். இது தடைசெய்யப்பட்ட பகுதி. கொஞ்சம் ஓரமாக நில்லுங்கள். இந்த வழியாக நிறைய கார்கள் வரும். தயவு செய்து உங்களை நீங்களே காயப்படுத்தி கொள்ளாதீர்கள்” என்றுள்ளார். இதனிடையே நடிகை ராதிகா அஜித்தை அங்கு சந்தித்துள்ளார். அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.



Source link