சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல்

தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பினால் ஏற்பட்ட உடல் நலக் குறைவால் மதுரையில் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரைக்கலைஞர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் மறைவுக்கு நடிகர் விஜய் சேதுபதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ் மேடையின் ஒரு பொற்காலம் மறைந்தது. பட்டிமன்றத்தை வீடு வீடாக கொண்டு சென்ற, தமிழை எளிமையாக, அழகாக பேசி புரிய வைத்த சாலமன் பாப்பையா அவர்களின் மறைவு தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது சொற்கள் வழி வழியாக தமிழுக்குள் வாழும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என கூறியுள்ளார்.



Source link