மோதல்களை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, ராஜந்திரமுமே வழி: புதினிடம் வலியுறுத்திய பிரதமர் மோடி

இந்தியாவில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்கான ரஷிய அதிபர் புதின் டெல்லி வந்துள்ளார். டெல்லி வந்துள்ள புதினை, இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து இந்தயி வெளியுறவுத்துறை அமைச்சம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், மோதல்களைத் தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே வழி என்று பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார்.

அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயார்

* ரஷிய அதிபர் புதினுடனான பேச்சுவார்த்தையில், உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமைதி முயற்சிகளுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

* அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி மற்றும் திறன் பரிமாற்றம் ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் விவாதித்தனர்.

ரஷியா செல்கிறார் பிரதமர் மோடி

* 24-வது இந்தியா- ரஷியா மாநாட்டிற்காக ரஷியாவிற்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அழைப்பு விடுத்தார். மேலும் மோடி அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்

* மேற்கு ஆசியாவில் நிலவும் மோதல்கள் மற்றும் கருங்கடல் பிராந்தியத்தின் நிலைமை குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் தங்கள் கண்ணோட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

* BRICS உட்பட பலதரப்புத் துறையில் இந்தியா- ரஷியா ஈடுபாடு குறித்து பிரதமர் மோடியும் அதிபர் புதினும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சம் தெரிவித்துள்ளார்.

Source link