தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது கார் ரேஸ் பந்தயத்தில் கலக்கி வரும் நடிகர் அஜித்குமார், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் கார் பந்தயத்தில் பங்கேற்க உள்ள நிலையில், நடிரக ராதிகா அஜித்தை சந்தித்த வீடியோ பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்திற்கான புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றுள்ள நிலையில், சில்வர்ஸ்டோனில் நடைபெறும் கார் பந்தயத்தை கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பந்தயத்தில், நடிகர் அஜித்குமார் பங்கேற்க உள்ள நிலையில். பந்தயத்தை விஜய் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார் என்ற தகவல் வெளியானது இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் சமகால நடிகர்களாக இருந்த விஜய் அஜித் இருவரும், ராஜாவின் பார்வையிலே படத்தில் இணைந்து நடித்துள்ளனர். வசந்த் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான நேருக்கு நேர் படத்தில் மீண்டும் இருவரும் இணைந்து நடிக்க இருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தில் இருந்து அஜித் விலக அந்த கேரக்டரில் நடிகர் சூர்யா நடித்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
தற்போது விஜய் சினிமாவில் இருந்து விலகி, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அஜித் நடிப்பு மற்றும் கார் பந்தயம் என பிஸியாக இருந்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் தமிழகத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பு நன்றி சொல்லி, அஜித் விஜய்க்கு கடிதம் எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து கார் பந்தயத்தில் விஜய் – அஜித் சந்திப்பு நடைபெறும் என்ற அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது
இதனிடையே, விஜய் அஜித் சந்திப்புக்கு முன்னதாக, அஜித்தை நடிகை ராதிகா நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது நடிகை ராதிகா சரத்குமார் அஜித்தை கட்டிப் பிடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராதிகா வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களையும், அஜித்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வரும் ராதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான தாய் கிழவி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், ஹாய், பியார் பிரேமா கல்யாணம் என தொடர் வெற்றிப்படங்கள் ரிலீஸ் ஆனது. தற்போது அவர் அஜித்தின் கார் பந்தயத்தையும் காண சென்றுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
