குயென் டி ஸ்டிரீட்: வியட்நாம் ஓபன் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் தான்வி சர்மா, பிரனாய் உள்ளிட்டோர் முன்னேறினர்.
வியட்நாமில், ‘சூப்பர் 100’ அந்தஸ்து பெற்ற வியட்நாம் ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் தான்வி சர்மா, மாளவிகா பன்சோத் மோதினர். இதில் தான்வி சர்மா 21-18, 15-21, 21-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ரக் ஷிதா ஸ்ரீ 21-12, 21-10 என, சகவீராங்கனை மான்சி சிங்கை வீழ்த்தினார். இந்தியாவின் இஷாராணி 21-15, 21-18 என, சீனதைபேயின் ஹுவாங் சிங் பிங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரனாய் 28-26, 21-12 என, சகவீரர் சான்ஸ்கர் சரஸ்வத்தை தோற்கடித்தார்.
